பூமிகா (திரைப்பட விமர்சனம்)

5

படம்:  பூமிகா

நடிப்பு: ஐஸ்வர்யா ராஜேஷ், விது, அவந்திகா,  மாதுரி, பாவேல் நவகீதன் சூர்யா கணபதி,

இசை: பிருத்வி சந்திரசேகர்

ஒளிப்பதிவு: ராபர்டோ ஜசாரா

தயாரிப்பு::கார்த்திகேயன் சந்தானம்,சுதன் சுந்தரம், ஜெயராமன்

இயக்கம்: ரத்திந்திரன் ஆர் பிரசாத்

காட்டுபகுதியில் அமைந்திருக்கும் பழங்கால கட்டிடத்தை சீரமைக்க  ஹீரோ விது தனது மனைவி ஐஸ்வர்யா, குழந்தை மற்றும் தங்கை ஆகியோருடன் செல்கிறார். அவர்களுடன்  பொறியாளர் சூர்யா கணபதியும் செல்கிறார். நடுக்காட்டில் இருக்கும் அந்த கட்டிடத்தில் பேய் நடமாட்டம் இருப்பது தெரியவருகிறது.  சார்ஜ் இல்லாத செல்போனில் மெஜேச் அனுப்பி அவர்களை எச்சரிக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த பேய் நேரில் வந்து அவர்களை கொல்ல முயல்கிறது.. அதனிடமிருந்து விது. ஐஸ்வர்யா மற்றவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் எதற்காக பேய் அவர்களை கொல்ல வருகிறது  என்பதை திகிலுடன் விளக்குகிறது பூமிகா.

வழக்கமான பேய் படமாக இல்லாமல் இதை ஒரு மெசேஜுடன் இயக்கி இருக்கிறார் ரத்திந்திரன் ஆர். பிரசாத். ஹீரோயின் ஐஸ்வர்யா ராஜேஷ், ஹீரோ விது. மாதுரி, சூர்யா கணபதி, பாவல் நவகீதன் என எல்லோருமே தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கின்றனர்.

ஆட்டிஸம் பாதித்த பெண்ணாக நடித்திருக்கும் அவந்திகா தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

நண்பருடன் பேசுவதாக கூறி சூர்யா கணபதியும், மாதுரியும் செல்போனில் மெசேஜ் அனுப்ப அதற்கு உடனுக்குடன் பதில் வருவதும் பின்னர் தான் இந்த அறையில்தான் இருப்பதாக கூறும்போது பேய் பயம் அவர்களுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் தொற்றிக்கொள்கிறது.

எல்லோரையும் சமாதானப்படுத்தும் ஐஸ்வர்யா கடைசியில்  தானே பேய் வருவதை கண்டு குழந்தையைகூட மறந்துவிட்டு காரில் வேகமாக தப்பிக்கும்போது படபடப்பு எகிறுகிறது மீண்டும் குழந்தை ஞாபகம் வந்ததும் அந்த பங்களாவுக்கே திரும்பி வந்து குழந்தையை பேயிடமிருந்து காப்பாற்ற செல்லும்போது அடுத்து என்ன நடக்குமோ என்ற பதற்றம் அதிகரிக்கிறது.

ஹீரோ விது இயல்பான நடிப்பாலும் பேச்சாலும் மனதில் பதிகிறார். உதவியாளர் பாவல் நவகீதன் எந்த  நேரத்திலும் வில்லனாகிவிடுவாரோ என்ற ஒரு எதிர்பார்ப்பும் அவரது பாத்திரத்தை உன்னிப்பாக கவனிக்க வைக்கிறது.

ஸ்டோன் பெஞ்ச், பேஷன், ஸ்டுடியோஸ் சார்பில் கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம், ஜெயராமன் தயாரித்திருக்கின்றனர். திகில் படத்தின் கிளைமாஸில் எதிர்பாராத  இயற்கை உலகத்துக்கு அழைத்துச் செல்கிறார் இயக்குனர் ரத்திந்திரன் ஆர். பிரசாத்.

பிருத்வி சந்திர சேகர் இசை தேவையான இடத்தில் திகிலை உருவாக்குகிறது. அதேபோல் ஒளிப்பதிவாளர் ராபர்டோ ஜசாரா கேமராவும் காட்சிகளுக்கு ஏற்ப ஒளியை படரவிட்டிருக்கிறது.

பூமிகா – இந்த காலகட்டத்துக்கு  தேவையான படம்.

.

Leave A Reply

Your email address will not be published.