மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்  கமல்ஹாசன்  67 வது பிறந்தநாளில் இன்ப பேரதிர்ச்சி

0

வரும் நவம்பர் 7 அன்று, உலகநாயகனும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான  கமல்ஹாசன்  67 வது பிறந்தநாளையொட்டி, அவருடைய ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் ஒரு இன்பப் பேரதிர்ச்சி காத்திருக்கிறது!

தன் சமூக அக்கறையையும், நாட்டின் நலனையும் என்றென்றும் சிந்திக்கும் கமல்ஹாசனின் முப்பரிமாண சிலை ஒன்று, இரண்டு பலூன் செயற்கைக்கோளுடன், விண்முட்டக் காத்திருக்கிறது.
இவ்விரண்டு பலூன்களும், கமல்ஹாசனின் முப்பரிமாண சிலையை சுமந்தபடி, காற்றின் அடுக்கு மண்டலங்களைத் துளைத்து, சுமார் 70000 அடி உயரத்தில் பறந்து, தீபாவளி அன்றும், அதற்குப் பின்னும் காற்றின் தரக் குறியீட்டைத் துல்லியமாக அளக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது .
இதன் கருத்துருவாக்கம்,  கமல்ஹாசன் கட்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் திரு . S B அர்ஜுன் அவர்களால் முன்வைக்கப்பட்டது.‌

இந்த மாபெரும் எண்ணத்தை செயலாக்கும் தீவிரத்தில், Dr . ஸ்ரீமதி கேசன்  தலைமையில் SPACE KIDZ INDIA என்ற அமைப்பு ஈடுபட்டுள்ளது.
பல கல்லூரி மாணவர்களும் எண்ணற்ற கமல் ரசிகர்களும் இந்த முயற்சியை செயலாக்கக் காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே SPACE KIDZ INDIA குழுவினர், உலகின் மிகச் சிறிய செயற்கைக் கோளான KALAMSAT வடிவமைத்து, நாசாவின் மூலம் விண்ணில் ஏவி சாதனைப் படைத்ததோடு மட்டுமல்லாது, 2 செயற்கைக்கோள் PAYLOADகளை ISRO உடன் இணைந்து ஏவியுள்ளது. 2015 ம் ஆண்டு முதல் தொடர்ந்து, இந்தியாவின் விஞ்ஞான ஆராய்ச்சியை மேம்படுத்தும் பெருமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த முயற்சியின் சிறப்பம்சம் என்னவென்றால் , உலகிலேயே முதல் முறையாக, விண்ணை எட்டும் செயற்கைக்கோளில் , இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவரின் முப்பரிமாண சிலை இணைக்கப்படுகிறது.
தங்கள் அன்புக்குரியவரின் பிறந்தநாளன்று இந்த சாதனையைப் படைப்பதில் SPACE KIDZ INDIA நிறுவனம் பெருமிதம் கொள்கிறது .

கமல்ஹாசனின் முப்பரிமாண சிலையோடு விண் தொடவிருக்கும் இவ்விரு பலூன் செயற்கைக்கோள்கள், காற்றின் தரத்தினை தரவாக சேகரித்து , இதற்கு முந்தைய தீபாவளிப் பண்டிகைகளின் போதிருந்த காற்று மாசுத் தரத்துடன் துல்லியமாக ஒப்பிட்டு, சுற்றுப்புற சூழலின் தரத்தின் தேவையையும், இன்றைய உண்மை நிலையையும் உலகநாயகனின் மூலம் உலகிற்கே சொல்லும்.
முதல் பலூன் செயற்கைக்கோள், நவம்பர் 4 ம் தேதியன்றும், இரண்டவது பலூன் செயற்கைக்கோள் நவம்பர் 5 ம் தேதியும், சென்னை SPACEBOAT INDIA தளத்திலிருந்து ஏவப்படுகிறது .

Leave A Reply

Your email address will not be published.