பிஸ்கோத் படம் ரிலீஸ்: இயக்குனர்- ஹீரோ உருக்கமான பேச்சு

கஷ்டத்துக்கு கிடைத்த பலனால் மகிழ்ச்சி

56

கடந்த 7 மாதங்களாக கொரோனா ஊரடங்கு  திரையுலகை முற்றிலுமாக முடக்கி இருந்தது. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆர்.கண்ணன் இயக்கி தயாரிக்க சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம் பிஸ்கோத் தீபாவளி தினத்தில் திரைக்கு வெளிவந்து வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து ஆர்.கண்ணன் கூறும்போது,’ பிஸ்கோத் படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்தபோது வட்டி கரணமாக  3 கோடி பற்றாக்குறை ஏற்பட்டது. நடிகர் சந்தானம் வீட்டுக்கதவை அதிகலையில் தட்டினேன். அவர் 50 லட்சம் தந்து உதவினார். பிறகு அன்புச் செழியன், டிரைடண்ட் ரவீந்திரன், பைனான்சியர்கள் உதவியுடன் படத்தை ரிலீஸ் செய்தோம். தியேட்டரில் படத்துக்கு ரசிகர்கள் ப வரவேற்பு தருகிறார்கள். குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். தமிழ்தாடு முழுவதும்  650 தியேட்டர்களில் படம் வெளியாகி உள்ளது.  அடுத்து மீண்டும் சந்தானத்தை வைத்து படம் இயக்க உள்ளேன்’ என்றார்.

நடிகர்  சந்தானம் கூறியதாவது:
பிஸ்கோத் படம் வெளியாக நான் ரூ 50 லட்சம்  தந்ததாக இயக்குனர், தயாரிப்பாளர் ஆர்.கண்ணன் கூறினார். இதனால் சந்தானம் நிறைய பணம் வைத்திருக்கிறார் என்று எண்ணி விடாதீர்கள். இந்த படத்தை நான் பைனான்சிய ரிடம் கேட்டுத்தான் வாங்கித் தந்தேன்.
பிஸ்கோத் படத்தை தியேட் டரில் வெளீடுவதா? ஒடிடியில் வெளியிடுவதா என்று குழப்ப மான நிலை இருந்துவந்தது. தியேட்டர்கள் திறக்கப்படும் என்ற தகவல் வந்ததால் காத்திருந்து தியேட்டரில் வெளியிட முடிவு செய்யப் பட்டது. கொரோனா காலத்தில் படத்தை தியேட்டரில் பயந்துக் கொண்டேதான்  வெலளியிட்டோம். இப்படத்தை பார்த்துத்தான் மற்றவர்கள் தங்கள் படத்தை வெளியிடுவார்கள்.  முதல் நாள் எனது சொந்தங்களான ரசிகர்கள் தியேட்டரில் வந்து படம் பார்த்தார்ர்கள். இப்போது குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். எல்லோரும் அரசு விதிமுறைப்படிமுக கவசம் உள்ளிட்ட  பாதுகாப்புடன் வந்து  படம் பார்க்க கேட்டுக்கொள்கிறேன்.   சினிமா வெறும் வியாபாரம் மட்டுமல்ல ரசிகர்கள் நடிகர்களை கொண்டாடுகிறார்கள். அதுவொரு மகிழ்ச்சியான விஷயம். அதையாரும் இழக்க விரும்ப மாட்டார்கள்.

டிக்கிலோனா என்ற படத்தில் நடித்து வருகிறேன். அப்பட இயக்குனர் என்னிடம் அழுதே விட்டார். படத்தை ஒடிடியில் வெளியிடுவதாக பேசுகிறார் கள் என்று வருத்தப்பட்டார். அதற்கு காரணம் அவர் திரை யுலகில் கஷ்டப்பட்டு பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கதையை உருவாக்கி இருக்கி றார். அதில் உள்ள பஞ்ச் உள்ளிட்ட வசனங்களை மக்கள் ரசிப்பதை பார்க்க முடியாமல் போய்விடுமோ என்ற ஆதங்கம்தான் அவரது அழுகைக்கு காரணம். ஒடிடி யில் விற்றால் பணம் வரும் ஆனால் சினிமா வியாபாரம் மட்டும் கிடையாது, அதையும் தாண்டி அது மக்களோடு ஒன்றாக கலந்திருக்கிறது.

இவ்வாறு சந்தானம் கூறினார்.

 

Leave A Reply

Your email address will not be published.