பிஸ்கோத் (பட விமர்சனம்)

25

படம் : பிஸ்கோத்
நடிப்பு: சந்தானம். தாரா. அலிஷா, சவுகார் ஜானகி, ஆனந்தராஜ், ஆடிகலம் நரேன்,
தயாரிப்பு: ஆர்.கண்ணன்
இசை: ரதன்
இயக்கம்: ஆர்.கண்ணன்


ஆடுகளம் நரேன் சிறிய அளவில் பிஸ்கட் பேக்டரி நடத்தி கடைகளுக்கு பிஸ்கட் சப்ளை செய்கிறார். அவரது மகன் சந்தானம். நரேனின் நண்பர் ஆனந்தராஜ் பிஸ்கட் கம்பெனியில் ஒரு பார்ட்னர். இதை பெரிய நிறுவனமாக்கி இந்து கம்பெனிக்கு உன்னை ஜி எம் ஆக்குகிறேன் என்று சிறிய வயதில் மகனிடம் சொல்கிறார் நரேன். சிறிது நேரத்தில் இறந்து போகிறார். பிஸ்கட் கம்பெனி ஆனந்தராஜ் கைக்கு செல்கிறது. அதே கம்பெனியில் சூப்பர் வை சாராக இருக்கிறார் சந்தானம். ஜி எம் போஸ்ட்டுக்காக சந்தானத்துக்கும். இன்னொ ருவருக்கும் இடை யே போட்டி வைக்கிறார் ஆனந்த ராஜ். அதில் யார் ஜெயித்து ஜி எம் ஆகிறார்கள் என்பது கிளைமாக்ஸ்.
சந்தானம்தான் ஹீரோ. சீனுக்கு சீன் அவரது அட்டாகாசம் காட்சிகளை விறுவிறுப்பாக்கு கிறது. ஆசிரமத்தில் தங்கி இருக்கும் பாட்டி சவுகார் ஜானகி கதை சொல்லியாக வருகிறார். அவர் சொல்லும் கதைப்படி சந்தானம் வாழ்வில் சம்பவங்கள் நடக்கிறது. ஜிஎம் போஸ்ட் பெறுவதற்காக அவர் சொல்லும் கதையை நம்பிக் கொண்டிருக்கிறார் சந்தானம் . அதன்படி எல்லாம் நடக்கிறது ஆனால் சவுகார் உள்ளிட்ட முதியவர்களையும் சந்தானமே வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது.
பல வித கெட்டப்பில் வரும் சந்தானம் சிரிப்பு மழை பொழிய வைக்கிறார். அவ ருக்கு கூடவே வந்து ஜால்ரா அடித்து காமெடி செய்கின்ற னர் மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர்.
ஹீரோயின் தாரா, அலிஷா நிறைவான நடிப்பை தருகின் றனர். ஆனந்தராஜ் சில சமயம் வில்லனாக தோன்றுகிறார், சில சமயம் காமெடி செய்கி றார். ஆடுகளம் நரேன் சிறிய வேடமாக இருந்தாலும் நல்ல தொடக்கத்தை தருகிறார்.


சவுகார் ஜானகியின் முதிர்ச்சி யான தோற்றம் கதைக்கு பலம். நடிப்பும் அவருக்கு சொல்லியா தர வேண்டும், அசத்தி விடுகிறார்.
கவலையாக வந்தாலும் கவலை மறந்து ஜாலியாக செல்லும் அளவுக்கு காட்சிகள் கலகலப்பாக அமைக்கப்பட்டி ருக்கிறது. ஆர். கண்ணன் ரசிகர்களின் குறிப்பாக சந்தானத்தின் ரசிகர்களின் நாடி அறிந்து காட்சிகளாக அமைத் திருக்கிறார். பெண்களையும் குழந்தைகளையும் கவரும் வகையில் கதை சொல்லி காட்சிகளை நகர்த்தி இருப்பது நல்ல ஐடியா.

பிஸ்கோத்- சிரித்து விட்டு வரலாம்.

Leave A Reply

Your email address will not be published.