கமலின் விக்ரம் வாரிக் குவித்த பாக்ஸ் ஆபீஸ்… எவ்வளவு தெரியுமா..?

0

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் சாதனையை உலக நாயகன் கமலின் விக்ரம் படம் முறியடித்துள்ளது. அதுமட்டுமின்றி கமலின் கேரியரில் முதல் நாளில் அதிக தொகை வசூலித்த படம் என்ற முத்திரையை விக்ரம் பெற்று உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ படம் நேற்று அதிகாலை வெளியானது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசனின் ஆக்‌ஷன் படம் வெளியாவதால் மொத்த தென்னிந்திய திரையுலகமே மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தது. அத்துடன் கமல்ஹாசனின் தீவிர ரசிகர்கள் நேற்று அதிகாலை முதலே சிறப்பான கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தியேட்டர் முன்பு ரசிகர்கள் கூடி ஒரே ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சியுடன் படத்தை வரவேற்றனர்.

உலகமெங்கும் 5 அயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடப்பட்ட இப்படம் தமிழகத்தில் மட்டும் 800க்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீசானது. ரிலீசானது முதல் பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வரும் இப்படத்தை ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். படம் மிகவும் மாஸாக இருப்பதாகவும் பகத் பாசில், கமல், விஜய் சேதுபதியின் நடிப்பு வேற லெவலில் இருப்பதாகவும் பாராட்டி வருகின்றனர். இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த மூன்று வருடங்களாக வெள்ளித்திரையில் இல்லாமல் இருந்த கமல்ஹாசனுக்கு முதல்முறையாக இப்படம் ரிலீஸுக்கு முன்னரே பெரும் வசூலை ஈட்டியது. பாக்ஸ் ஆபிஸ் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கமல்ஹாசன் தற்போது ஒரு நல்ல வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

விக்ரம் திரைப்படம் திரையிடுவதற்கு முன்னதாகவே வசூலில் சாதனை படைத்தது. இந்தநிலையில், இப்படம் ரிலீசான முதல் நாளில் 34 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் ரஜினியின் அண்ணாத்த படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் சாதனையை கமலின் விக்ரம் படம் முறியடித்துள்ளது. அதுமட்டுமின்றி கமலின் கெரியரில் முதல் நாளில் அதிக தொகை வசூலித்த படமாக விக்ரம் மாறி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.