கதை நாயகனாக போண்டாமணி நடிக்கும் ” சின்ன பண்ண பெரிய பண்ண”

3

 

வடிவேல், விவேக், சந்தானம், சூரி, யோகி பாபுவை போல் கதையின் நாயகனாக போண்டா மணி நடித்துள்ள படம் தான் ” சின்ன பண்ண பெரிய பண்ண”

மேலும் இதில் ஷர்மிலி, ஆர்.சுந்தர்ராஜன், பயில் வான் ரங்கநாதன், ஆதேஷ் பாலா, முத்துக்காளை, சிசர் மனோகர், பெஞ்சமின், வெங்கல்ராவ், சுப்புராஜ், நடேஷ், பெஞ்சமின், விஜய்கணேஷ், ஜான்சன், நெல்லை சிவா இன்னும் பலர் நடித்துள்ளனர்.

ரங்கதுரை, கவிதா குப்புசாமி இருவரும் பாடல்களையும்,
பிரேம்ஜி இசையையும், லட்சுமணன் எடிட்டிங் கையும், தீப்பொறி நித்யா சண்டை பயிற்சியையும், பவர் சிவா நடன பயிற்சி யையும் கவனித்துள்ளனர்.

கிராம நிர்வாக அதிகாரி யாக வரும் போண்டாமணி , அந்த கிராமத்தில் அக்கிரமம் புரியும் சின்ன பண்ணயிடம் மோது கிறார். விளைவு? யாரும் எதிர்பாராதது. சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனமாக இருக்க வேண்டும். அதனால் பெரும் அசம்பாவிதங் களை தடுக்கலாம்” என்பதை காமெடியுடன் கொஞ்சம் ஆக்சனையும் கலந்து தந்துள்ளேன்” என்று கதையை பற்றி கூறியுள்ள பகவதி பாலா இந்தப் படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ளார். இவர் பத்து படங்களுக்கு மேல் இயக்கி உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூர், மைசூர், ஓசூர், திருச்சி, சென்னை பகுதிகளில் வளர்ந்துள்ள ” சின்ன பண்ண பெரிய பண்ண” படத்தை சி.ப. தனசேகரன்
பகவதி பாலா இருவரும் இணைந்து எஸ். பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளனர்.

பி. ஆர் ஒ விஜயமுரளி
கிளாமர் சத்யா.

Leave A Reply

Your email address will not be published.