கேர் ஆஃப் காதல் (பட விமர்சனம்)

82

படம்: கேர் ஆஃப் காதல்
நடிப்பு: வெற்றி, தீபன், மும்தாஜ் சொர்கர், அயிரா, கார்த்திக் ரத்னம், சுவேதா,
இசை: சுவேகர் அகஸ்தி
ஒளிப்பதிவு: குணசேகரன்
தயாரிப்பு: ஸ்ரீ சிருடி சாய் மூவிஸ் ஸ்ரீ மற்றும் காவ்யா
இயக்கம் ஹெமம்பர் ஜஸ்தி
ரிலீஸ்: சக்தி பிலிம் பேக்டரி

ஒரே படத்தில் நான்கு காதல். முதல் காதல் பள்ளியில் பிறகு சாராய கடையில்  அதன்பிறகு ரவுடி கூட்டத்தில் கடைசியாக வயது முதிர்ந்த நிலையில் என  4 காதல் கதைகள் படத்தை ரம்மியமாக ஆக்ரமித்திருக்கிறது. சக மாணவி மீது லுக் விட்டு அரும்பு காதல் செய்யும் சிறுவன் அவள் வெளியூருக்கு சென்றுவிட்டாள் என்று தெரிந்ததும் பிள்ளையார் சிலையிடம் தனது கோபத்தை காட்டுகிறார்.

சாரய கடையில் வேலை பார்க்கும் வெற்றி அங்கு  சரக்கு வாங்க வரும் விபசார பெண்ணுக்கு குவார்ட்டரை கொடுத்து  அவளை காதலித்து  திருமணம் செய்யும் நேரத்தில் அவள் மர்மாக இறந்துவிட அந்த காதலும் அத்துடன் முடிகிறது.

அடிதடியில் ஈடுபட்டு ரவுடித் தனம் செய்பவனுக்கு  பிராமண வீட்டு பெண் மீது காதல் வருகிறது. அவரும் காதலுக்கு சம்மதிக்கிறார். தந்தையின் தற்கொலை மிரட்டலுக்கு பயந்து வேறு ஒருவனுக்கு கழுத்தை நீட்ட அந்த காதல் முறிகிறது.

49 வயதான ப்யூனுக்கும் அவரைவிட ஒன்றிரண்டு வயது குறைந்த கணவரை இழந்த 20 வயது மகளை கொண்ட தாய்க்கும் மலரும் காதல் முதிர்ந்த காதலாக வித்தியாசமாக வந்து நிற்க அதற்கும் எதிர்ப்பு கிளம்புகிறது. அதன் முடிவு என்னவாகிறது என்பது கிளைமாக்ஸ்.

முதல் மரியாதை படத்தில் அந்த நிலாவதான் கையில புடிச்சேன் பாடலுக்கு நடித்த தீபன் முதிர்காதலனாக நடித்திருக்கிறார். எதார்த்தமான நடிப்பு எதார்தமான பேச்சு என நடிப்பை உதிர்க்கிறார். அவர் மீது ஆசைப்பட்டு திருமணம் செய்ய விரும்பும் அந்த வயதான பெண்ணும் எதார்த்தத்தில் மிளிர்கிறார்.

சாரய கடையில் வேலை பார்க்கும் வெற்றி அங்கு சரக்கு வாங்க வரும் விபசார பெண் மீது காதல் கொண்டு அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுப்பது  ஏற்க கூடியதாக இல்லாவிட்டாலும் அந்த பாத்திரத்தின் குணம் அது என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார். விபசாரி வேடத்தில் துணிச்சலாக வசனம் பேசி நடித்து யாரிந்த நடிகை என ஆச்சர்யபட வைக்கிறார் மும்தாஜ் சொர்க்கர்.

கிளைமாக்ஸில் நான்கு காதலுல் ஒரே நபருடைய காதல் என்று முடிக்கும்போது ஆச்சர்யம் பரவுகிறது அப்படி இல்லாமல் நான்கு தனிக் காதல்கதைகளாக கூட வைத்திருந்தால் ரசிக்கும்படித்தான் இருந்திருக்கும்,

ஹெமம்பர் ஜஸ்தி தெளிந்த நீரோடையாக ஸ்கிர்ட்டை அமைத்து ரசனைக்கு தீனி போட்டிருக்கிறார்.

கேர் ஆஃப் காதல் – மனதோடு பேசும்.

 

Leave A Reply

Your email address will not be published.