சேசிங் (பட விமர்சனம்)

312

படம்: சேசிங்
நடிப்பு: வரலட்சுமி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, சூப்பர் சுப்பராயன், சோனா, ஜெரால்ட், யமுனா
இசை: தசி
ஒளிப்பதிவு: ஈ.கிருஷ்ணசாமி

தயாரிப்பு: மதியழகன் முனியாண்டி
இயக்கம்: கே.வீரக்குமார்

உயர் போலீஸ் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரவட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக  பெண்  கடத்தல் மற்றும் போதை மருந்து கடத்தல் கும்பலைப்பற்றி உயர் அதிகாரியிடம் தகவல் தெரிவித்து அவர்களை கைது செய்யும் பொறுப்பை வரலட்சுமி ஏற்கிறார்.  தனக்கென நம்பிக்கையான போலீஸ் டீமை உருவாக்கிக்கொண்டு அதற்கான வேட்டையை தொடங்குகிறார்.  இளம் பெண்களை பலாத்காரம் செய்யும் வில்லன். போதை மருந்து கடத்தி விற்கும் கூட்டம் என ஒவ்வொன்றையும் அழிக்கும் வேலையில் இறங்குகிறார் வரலட்சுமி. இந்நிலையில் வரலட்சுமியின் டீமை கடத்துகிறது போதை மருந்து கூட்டம். அவர்களை வரலட்சுமி எப்படி காப்பாற்றுகிறார் என்பது கிளைமாக்ஸ்.

ஹீரோ படத்தில் இல்லாட்டாலும் வரலட்சுமிபின் தோளிலிலேயே   முழுகதை பொறுப்பும் ஏற்றி வைக்கப் பட்டிருகிறது. ஹீரோக்களுக்கு சமமாக  வரலட்சுமியும் ஆக்ஷ்ன் காட்சிகளில் துணிச்சலாக நடித்திருக்கிறார். முதல் காட்சியிலேயே பெண்ணை கடத்தும் ரவுடிகளை துரத்தி தாக்கி ஆக்‌ஷன் ஹீரோயினாக எண்ட்ரி தருகிறார்.

பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்யும் சூப்பர் சுப்பராயன் வீட்டுக்குள் அவர் இல்லாதபோது  புகுந்து ஆதாரங்களை வரலட்சுமி தேட இதற்கிடையில் வெளி வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பும் சூப்ப்பர் சுப்பராயன் வரலட்சுமியை பிடித்து சித்ரவதை செய்வரோ என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த பரபரப்பு படத்தில் பல இடங்களில் இடம்பெறுவது பிளஸ்.

போதை மருந்து ஏஜென்ட்டாக வரும் சோனா கொலை, சூப்பர் சூப்பராயன் கொலை என  வரிசையாக வரலட்சுமி போட்டு தள்ளுவதும் மலேசியா சென்று அங்குள்ள போதை மருந்து கூட்ட தலைவனையும் அவனது தம்பியையும் வரலடசுமி வேட்டையாடுவதும் திரைகதையில் வேகத்தை அதிகரிக்கிறது.  சண்டை காட்சிகளிலும் வரலட்சுமி அசத்தி இருக்கிறார்.

கடத்தல் கும்பலை சுட்டு, கொன்றும், கொலை செய்தும்  பழிவாங்கும் வரலட்சுமியின் கோபத்துக்கு பின்னால் ஒரு சென்ட்டிமென்ட்டான பிளாஷ் பேக் இருக்கிறது என்பதை யூகிக்க முடியவில்லை. போதை மருந்து கூட்டத்திடம் தனது டீமை சேர்ந்த போலீஸார் சிக்கிக்கொண்டதை அறிந்து அதிர்ச்சி அடையும் வரலட்சுமி அவர்களை மீட்க போராடுவது பரபரப்பு.

பால சரவணன் காமெடிக்கு பயன்பட்டிருக்கிறார். சூப்பர் சூப்பராயன் மிரட்டலிலேயே வில்லத்தனம் வெளிப்படு கிறது. மற்றும் மலேசியா வில்லன். ஜெரால்ட் போன்றவர் களும் வில்லன்களாகவே செயல்பட்டு காட்சிக்கு  பலம் சேர்க்கின்றனர்.

படத்தின் 2ம் பாகம் முழுவதும் மலேசியாவில் படமாகி இருக்கிறது. ஈ.கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு மலேசியாவின் எழிலை அள்ளி வந்திருக்கிறது. தஷி இசை காட்சிகளை வேகப்படுத்தி இருப்பதுடன் பின்னணி இசையில் விறுவிறுப்பை சேர்த்திருக்குறது.

புதுமுக இயக்குனர் கே.வீரக்குமார் திரைக்கதையை  ஆங்காங்கே சஸ்பென்சு வைத்து இயக்கி சுவாரஸ்யாமாக்கி இருக்கிறார்.

சேசிங்- வரலட்சுமியின் ஆக்‌ஷன் த்ரில்லர்.

Leave A Reply

Your email address will not be published.