செவாலியே சிவாஜி சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

உலகமெங்கும் 94வ்து பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்கள்

1

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி 94வது பிறந்த நாள் இன்று. கொரோனா பரவல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக மிக எளிமையாக  கொண்டாடப்பட்டது.

சென்னை அடையாறு பகுதியில் உள்ள சிவாஜி மணிமண்டபத்துக்கு இன்று காலை தமிழக முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து சிவாஜி சிலைக்கு மலர்மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினார். அப்போது சிவாஜி மூத்த மகன் ராம்குமார், இளையமகன் பிரபு, மற்றும் குடும்பத்தினர்  குழுமியிருந்து முதல்வரை வரவேற்றனர்,.

தமிழகம் முழுவதும் மற்றும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் சிவாஜி ரசிகர் மன்றம் சார்பில் சிவாஜி 94வது பிறந்த தினம் கொரோனா கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டு கொண்டாடப்பட்டன. மாணவ, மாணவிகளுக்கு உதவி, ஏழைகளுக்கு அன்னதானம் போன்ற நற்பணிகளை சிவாஜி மன்றத்தினர் செய்தனர்,

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிவாஜி உருவப்படங்கள்  அலங்கரித்து வைத்து மரியாதை செலுத்தப்பட்டது,.

Leave A Reply

Your email address will not be published.