சின்னஞ் சிறு கிளியே (, திரைப்பட விமர்சனம்)

10

படம்: சின்னஞ்சிறு கிளியே
நடிப்பு: செந்தில்நாதன், அர்ச்சனா சிங், சாண்ட்ரா நாயர், பதிவத்தினி, பாலாஜி சண்முகசுந்தரம், குள்ளபுலி லீலா.
தயாரிப்பு: செந்தில்நாதன். எஸ்.
இசை: மஸ்தான் காதர்
ஒளிப்பதிவு: பாண்டியன் கருப்பன்
இயக்குனர்: சபரிநாதன் முத்துப்பாண்டியன்

கமர்ஷியல் பேய் படங்களுக்கு மத்தியில் அவ்வப்போது குடும்ப உணர்வுகளை பேசும் படங்களும் வருகின்றன. அந்த வரிசையில் தந்தை, மகளுக்கு இடையேயான பாசத்தை சொல்லும் கதையாக மலர்ந்திருகிறது சின்னஞ்சிறுகிளியே

பிரசவத்தின்போது மகளை பெற்றுகொடுத்துவிட்டு கண்கள்.மூடுகிறார் தாய். ஆங்கில மருத்துவத்துக்கு மனைவியை பறிகொடுத்து விட்டதாக வருந்தும் செந்தில்நாதன் மகளை அன்போடு வளர்க்கிறார் . அந்த வீட்டுக்கு இயற்கை மருத்துவம் பற்றிய தகவல்களை சேகரிக்க வருகிறார் மற்றொரு பெண் அவரிடம் செந்தில் நாதன சிடு சிடுவென விழுகிறார். அது குழந்தைக்கு பிடிக்க வில்லை. தந்தையிடம் கோபித்துக்கொள்கிறார். மகளுக்காக தனது குணத்தை மற்றிக்கொள் கிறார். இந்நிலையில் செந்தில்நாதனின் அன்பு மகள் கடத்தப்படுகிறார். குழந்தையை கடத்தியது யார், செந்தில்நாதன் குழந்தையை மீட்டாரா என்பதற்கு படம் விடை சொல்கிறது.

விருது படங்கள் என்றால் நீண்ட வசனங்கள், குறிப்பால் உணர்த்தி அமைதியாக கடைசிவரை செல்லும் எனற பார்முளாவி லிருந்து மாறுபட்டிருகிறது இப்படம்.
கர்ப்பிணி மனைவியை மருத்துவமனையில் சேர்த்து பிரசவத்தில் இறந்து போனதும் இயற்கை மருத்துவ நிபுணரான செந்தில்நாதன் மனவேதனையை அழுது கதறி வெளிப்படுத்துவது உருக்கம்.
திருவிழாவில் குழந்தையை சிலர் கடத்தியதை அறிந் ததும் பதறியபடி குழந்தை யை மீட்க கடத்தல் காரர்களிடம் சண்டை போட்டு போராடுவதும் ஆனால் அவர்கள் செந்தில்நாதனை அடித்து விட்டு குழந்தையை துக்கிக் கொண்டு தப்பிப்பதும் பரபர.

செந்தில்நாதன் மனைவி யாக வரும் சாண்ட்ரா நாயர் பளிச்சென சிரித்து கவர்கிறார். மாணவியாக வரும் அர்ச்சனா சிங் மற்றும் தந்தை, தாய், மச்சான் உறவுகளும் கொடுத்த வேலையை செய்துள்ளனர்.

குழந்தை பதிவத்தினி சுட்டித்தனங்கள் ரசிக்கும்படி உள்ளது

இயக்குநர் சபரிநாதன் முத்துப் பாண்டியன் இயற்கை மருத்துத்வதை உயர்த்திப் பிடித்திருக் கிறார்.

இசையும், ஒளிப்பதிவும் காட்சிகளை இயற்கையி லிருந்து மாறுபடாமல் பயணிக்கிறது.

சின்னஞ்சிறு கிளியே- சிறகடிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.