படம்: சித்திரைச் செவ்வானம்
நடிப்பு: சமுத்திரக்கனி, பூஜா கண்ணன், ரீமா கல்லிங்கல், சுப்ரமணிய சிவா
இசை: சாம் சி.எஸ்.
ஒளிப்பதிவு:மனோஜ் பரமஹம்சா, கே.ஜி.வெங்கடேஷ்
தயாரிப்பு: ஏ.எல்.அழகப்பன், பி.மங்கையர்க்கரசி
இயக்கம்: ஸ்டன்ட் சில்வா
ரிலீஸ் : ஜீ5 ஒ டி டி தளம்
“சில வருடங்களுக்கு முன் பொள்ளாச்சி பாலியல் சம்பவம்பற்றி பரபரப்பாக பேசப்பட்டது.அதுபோன்ற சம்பவத்தை தழுவி உருவாக்கப்பட்ட கதை தான் சித்திரைச் செவ்வானம். இப்படத்தின் கதையை இயக்குனர் விஜய் எழுதி உள்ளார். எப்படியெல்லாம் இளம் பெண்களை சில இளவட்டங்கள் மயக்கியும் மிரட்டியும் சீரழிக்கிறார்கள் என்பதை பட்டவர்த்தன மாக சொல்கிறது படம்.
பொள்ளாச்சியில் அழகான மனைவி அன்பான குழந்தையுடன் வாழ்கிறார் சமுத்திரக் கனி.யார் கண்பட்டதோ மனைவி மின்சார ஷாக் அடித்து இறந்து விடுகி றார். தாய் இல்லாத குறை தெரியாமல் மகளை வளர்க்கிறார் சமுத்திரக் கனி. சரியான மருத்துவம் கிடைக்காமல் மனைவி இறந்ததுபோல் கிராமத் தில் யாரும் இறக்கக் கூடாது என்று சொல்லி மகளை டாக்டருக்கு படிக்க வைக்க பயிற்சி வகுப்பில் சேர்த்துவிடுகிறார். ஆனால் விதி சதி செய்து விட, சமுத்திரக்கனியின் மகளை சில இளைஞர்கள் ஆபாச படம் எடுத்து அவரது வாழ்வை சீரழிக் கின்றனர். மகளுக்கு நடந்த கொடுமையை கேட்டு கதறும் சமுத்திரக் கனி மகளை சீரழித்த வர்களுக்கு சரியான தண்டனை தர முடிவு செய்கிறார். இதற்கிடை யில் இந்த வழக்கை போலீஸ் கையிலெடுத்து தீவிர விசாரணை மேற்கொள்கிறது. குற்றவாளிகளுக்கு யார் தண்டனை கொடுத்தது என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
பாலியல் கொடுமைபற்றி நிறைய கதைகள் வந்தாலும் அதற்கான விழிப் புணர்வு மிகவும் குறைவாகவே இருக்கும் நிலையில் சித்திரைச் செவ்வானம் மற்றொரு விழிப்புணர்வு படமாக சரியான காலகட்டத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் விஜய் கதை எழுது உள்ளார். வெறுமனே பாலியல் பலாத்காரம் என்றில்லா மல் அதற்கு பின்னால் குடும்பங்கள் எப்படி பாதிக் கப்படுகிறது என்பதை வாழ்வியலாக கண்முன் நிறுத்துகிறார்.
எந்த வேடம் தந்தாலும் அந்த வேடத்தோடு ஒன்றிப்போகும் ஒரு சில நடிகர்களில் சமுத்திரக் கனியும் ஒருவர். பொறுப் பான தந்தையாக வேடம் ஏற்று அதை இயல்பான நடிப்பின் மூலம் நிறைவு செய்திருக்கிறார்.
மகளின் ஆபாச வீடியோவை வைத்தி ருக்கும் இளைஞர்களை தேடிச் சென்று அவற்றை டெலிட் செய்யக் கேட்கும் போது ஒரு தந்தையின் மன வலியை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கி றார் கனி.
சில சஸ்பென்ஸ்கள் கதையை விறுவிறுப்பாக முன்னெடுத்துச் செல் கிறது.
டாக்டர் படிப்பு பயிற்சிக் காக சென்ற மகள் ரத்த வெள்ளத்தில் வருவதும் அவரைக் கண்டு சமுத்திரக்கனி கதறுவதும் மனதை பதற வைக்கிறது.
ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன்ட் சில்வா படத்தை இயக்கி உள்ளார். ஆக்ஷன் படத்தைத்தான் இவர் தந்திருப்பார் என்று யாராவது எதிர்பார்த்துச் சென்றால் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் ஒரு தந்தை, மகளின் பாசத்தை அழுத்தமாக சொல்லி உருக வைத்துவிடுகிறார்
சமுத்திரக்கனியின் மகளாக. ந்டித்திருக்கும் பூஜா கண்ணன நடிகை சாய் பல்லவியின் தங்கை. பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
மனோஜ் பரமஹாம்சா, கே.ஜி. வெங்கடேஷ் ஒளிப்பதிவு, சாம்
சி.எஸ்.இசை அளவுடன் பதிவாகி காட்சியின் இயல்பு தன்மையை அதிகரிக்கச் செய்திருக் கிறது.
சித்திரைச் செவ்வானம்- பெண்களை இழிவு செய்யும் இளசுகளுக்கான சவுக்கு.