அமெரிக்காவில் இருந்து பாடுகிறார் சித்ஸ்ரீராம்

21

பின்னணி பாடகர்களில் மிக அதிக சம்பளம் வாங்குபவர், சித்ஸ்ரீராம். இவர், அமெரிக்காவில் வசிக்கிறார். அங்கிருந்தபடியே தமிழ் படங்களில் பாடி வருகிறார்.  மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு பாடகராக சித்ஸ்ரீராம் அறிமுகமானார். விக்ரம் நடித்து ஷங்கர் இயக்கி, ‘ஐ’ படத்தில் இடம்பெற்ற “என்னோடு நீ இருந்தால்..” பாடல் மூலம் பிரபலமானார்.

இப்போது இவர், இ.வி.கணேஷ்பாபு தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘கட்டில்’ படத்துக்காக, ஒரு பாடலை பாடியிருக்கிறார். “கோவிலிலே…” என்று தொடங்கும் அந்த பாடலை கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்தார்.

கலிபோர்னியாவில் உள்ள அதிநவீன ஒலிப்பதிவு கூடத்தில் இந்த பாடல் பதிவு செய்யப்பட்டது. ஸ்ரீகாந்த் தேவா சென்னையில் தனது ஸ்டூடியோவில் இணையக்காணொலி மூலம் பதிவு செய்தார்.

இந்த பாடலை பாடியது பற்றி சித்ஸ்ரீராம் கூறும்போது, “கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகள் ஆழமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருந்தன. சில வரிகள் பிரமிக்க வைத்தன” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.