குஷி பட எடிட்டர் கோலா பாஸ்கர் காலமானார்.

18

தமிழில் குஷி, 7ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை, புதுப்பேட்டை, கேடி, போக்கிரி ,யாரடி நீ மோகினி,  கண்டேன் காதலை ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களில் எடிட்டராக பணிபுரிந்தவர் கோலா பாஸ்கர்.

இவர் சில காலமாக தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 8 மணியளவில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 55.

மறைந்த பாஸ்கருக்கு மனைவியும் , பாலகிருஷ்ணா என்ற மகனும் உள்ளனர். தென்னிந்திய மொழி படங்களில் பணியாற்றியதற்காக இவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. எடிட்டர் கோலா பாஸ்கர் மறைவுக்கு தெலுங்கு, தமிழ் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.