8 மாதத்துக்கு பிறகு சினிமா தியேட்டர்கள் நாளைமுதல் திறப்பு: இன்று முன் பதிவு தொடக்கம்.

தீபாவளி கொண்டாட்டம் ஆரம்பம்..

13

 

கொரோனா ஊரடங்கால் கடந்த 8 மாதமாக தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. சினிமா படப்பிடிப்பு உள்ளிட்ட மற்ற பணிகளுக்கு அனுமதி அளித்தும் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து தியேட்டர் அதிபர்கள் மத்திய மாநில அரசுக்கு தியேட்டர் திறக்க அனுமதி கேட்டு  கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கடந்த அக்டோபர் 15ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. மற்ற மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் தமிழகத்தில் அனுமதி கிடைக்கவில்லை.

தமிழ்நாடு திரை அரங்கு மல்டி பிளக்ஸ் சங்க கவுரவ தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து  தியேட்டர் திறக்க அனுமதி கோரினர். அவர் அதை ஏற்று நவம்பர் 10ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதி அளித்தார். அதன்படி நாளை தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் திறக்கப்படவுள்ளன. முன்னதாக அனைத்து தியேட்டர்களும் மருந்து தெளிக்கப்பட்டு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

சென்னையில் உள்ள பி வி ஆர் அண்ட் எஸ்பிஐ திரையரங்குகள் டிக்கெட்கள் முன் பதிவு தொடங்கி உள்ளதாக அறிவித்திருக்கிறது. அதேபோல் வேலூர், கோவையிலும் டிக்கெட் முன்பதிவு நடக்கிறது. அரசு விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு பாதுகாப்பு முக கவசம் அணிந்து ரசிகர்கள் அனைவரை வரவேற்பதாக தியேட்டர்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

8 மாதத்துக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்படுவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Bookings for PVR and SPI are now open for Chennai, Coimbatore and Vellore. All Government norms and safety precautions are being undertaken to welcome you back to the cinemas. For bookings click on the links below.

Leave A Reply

Your email address will not be published.