திரை அரங்குகள் நவம்பர் 10ம் தேதி முதல் இயங்க அனுமதி..

தமிழக முதல்வர் அறிவிப்பு..

13

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தொடங்கியது முதல் திரை அரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. கொரோனா ஊரடங்கௌ தளர்விலும் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்பட வில்லை.


தியேட்டர் உரிமையாளர்கள் மத்திய மற்றும் மாநில அரசு களுக்கு கோரிக்கை விடுத் தனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 15ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. பிற மாநிலங்களில் தியேட்டர் கள் திறக்கப்பட்டது. தமிழத் தில் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் தியேட்டர் அதிபர்கள் மல்டி பில்ஸ் அதிபர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையில் முதல்வர் எட்பாடி பழனிசாமியை சந்தித்து தியேட்டர்கள் மத்திய அரசு கொரோனா வழிகாட்டு தலுடன் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதுகுறித்து அதிகாரிகள் டாக்டர்களுடன் கலந்து பேசி அறிவிப்பதாக முதல்வர் கூறியிருந்தார்.
சமீபத்தில் இதுகுறித்து மாவட்ட கலெக்டர், மற்றும் மருத்துவர்களிடம் முதல்வர் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று தியேட் டர்கள் திறக்க முதல்வர் அனுமதி அளித்திருக்கிறார். இதுகுறித்து முதல்வர் கூறும்போது,’தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதிக்கப்படுகிறது. 50 சதவித இருக்கைகளுடன் இயங்க கொரோனா வழிகாட்டுதல் நிபந்தனை களுடன் செயல்படலாம்’ என தெரிவித்திருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.