தீபாவளி ரிலீஸுக்கு தியேட்டர்கள் தயாராகிறது

சுத்தம் செய்து வர்ணம் பூசும் பணிகள் நடக்கிறது

16

கடந்த 7 மாதங்களாக கொரோனா ஊரடங்கால் மூடியிருந்த தியேட்டர்கள் வரும் 10ம் தேதி முதல் திறக்க முதல்வர் அனுமதி அளித்தார். 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், 10-ந் தேதியே தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்தது தியேட்டர் உரிமையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணி நேற்று முதல் தொடங்கி உள்ளது. ஊரடங்கு உத்தரவால் 7 மாத காலத்திற்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டு கிடப்பதால், தூசி படிந்து காணப்படும் இருக்கைகளை சுத்தம் செய்தல், பழுதான இருக்கைகளை மாற்றுவது, சுவர்களுக்கு வர்ணம் பூசுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வி பி எஃப் கட்டணம் ரத்து செய்யாவிட்டால் புதிய படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று பாரதிராஜா தமையிலான தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பலர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது. ஆனால் பன்றிக்கு நன்றி சொல்லி, களத்தில் சந்திபோம், இரண்டம் குத்து போன்ற படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.