கிளாப் – விமர்சனம்!

32

நடிகர்கள் – ஆதி, ஆகான்ஷா சிங்க், கிரிஷா குரூப்
இயக்கம் – பிரித்வி ஆதித்யா
தயாரிப்பு – பிக் பிரிண்ட் கார்த்தி

கதை –

தோல்வியடைந்த ஒரு ஒட்டப்பந்தய வீரன், ஒரு கிராமத்து சிறுமிக்கு டிரெய்னிங்க் கொடுத்து அவளை சாம்பியன் ஆக்குவதே கதை.. சினிமாவில் எத்தனை வகையான கதைகள் வந்தாலும் விளையாட்டுத் துறையை மையமாகக்ம்கொண்டு உருவான பல படங்கள் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது. அப்படித்தான் இந்த க்ளாப் படமும் கை தட்ட வைக்க முயன்றதில் ஜெயித்து விட்டது .

தடகளம் எனப்படும் அத்லெட்டிக் வீரரான ஆதி தனது தந்தை பிரகாஷ்ராஜுடன் பைக்கில் செல்லும் ஒரு விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தில் தனது ஒரு காலை இழந்து விடுவதுடன் தந்தை பிரகாஷ் ராஜூன் இறந்து விடுகிறார். இதனால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு எப்போதும் சோகமாக இருக்கிறார். இச்சூழ்நிலையில், கிராமத்தில் இருந்து வரும் கீழ் ஜாதியை சேர்ந்த மற்றொரு கதாநாயகியான கிரிஷா குருப்பை விளையாட்டு கிளப்பின் தலைவராக இருந்து வரும் நாசர், நிராகரிக்கிறார். நல்லதொரு திறமை இருந்தும் அவர் நிராகரிக்கப்படுவதை கண்டுணர்ந்து அந்த பெண்ணை சாதிக்க வைக்க வேண்டும், தன்னால் முடியாததை அந்த பெண் கொண்டு சாதிக்க வைக்க வேண்டும் என்று ஸ்போர்ட்ஸ் கிளப்பில் மிகப்பெரும் ஆளுமையான நாசரை எதிர்த்து, கிரிஷாவிற்கு பயிற்சியாளராக இறங்குகிறார் ஆதி. அந்த நாசரை எதிர்த்து ஆதியால் வெற்றி பெற முடிந்ததா இல்லையா என்பதே படத்தின் கதை.

கோலிவுட்டில் மிருகம் படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரி ஆனவர் ஆதி. அதைத் தொடர்ந்து ஈரம், மரகத நாணயம் என பல படங்களை ஹிட் கொடுத்திருக்கிறார். மெச்சூரிட்டியான லுக் கொண்ட ஆதி . இந்த படத்திலும் தேவைப்படுமளவு நடிப்பை கொடுத்துள்ளார் . அவர் ஒரு கால் இல்லாமல் படும் அவஸ்தையை ரசிகர்களுக்குக் கடத்துவதில் சாதித்து விட்டார் .கூடவே கால் இல்லாவிட்டாலும் தன்னால் ஒருவரை ஓட வைக்கமுடியும் என்பதை உணர்வுபூர்வமான நடிப்பில் வெளிப்படுத்தி கைத் தட்டல் வாங்குகிறார்.

அழகு மங்கையாக வரும் ஹீரோயின் அகான்ஷா க்ளைமாக்ஸ் காட்சியில் அசர வைத்து விடுகிறார். இன்னொரு நாயகியான கிருஷா குரூப் (கோலி சோட 2 படத்தில் நடித்தவர்) படத்தின் கதை ஓட்டத்திற்கும், படத்தில் தடகள ஓட்டத்திற்கும் பெரிதும் கை கொடுத்திருக்கிறார். இப்படத்திற்கென தனியாக பயிற்சியெல்லாம் எடுத்து கதாபாத்திரத்திற்கு தயாராகியிருக்கிறார் இந்த கிரிஷா என்பது படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் புரியும்படி களமாடி இருக்கிறார் .. மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தை தனது தோள் மீது சுமந்து அசாலாட்டாக செய்திருக்கிறார் கிரிஷா. நாயகனோடு முழுசாக பயணிக்கும் முனீஷ்காந்த் தொடங்கி நாசர், பிரகாஷ்ராஜ், மைம் கோபி ஆகியோர் தங்கள் பங்களிப்பை முழுமையாக வழங்கி இருக்கிறார்கள். பத்திரிகையாளர் ரோலில் புரொடியூசர் கார்த்திகேயன் அடடே சொல்ல வைக்கிறார்.

இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை அபாரம். குறிப்பாக் ரன்னிங் ரேஸ் சமயத்தில் தன் இசையால் பாரவையாளரின் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்க வைக்கிறார். கேமரா ஒர்க்-கும் நீட் .

பலத் தரப்பட்ட விளையாட்டு போட்டிகளில் நிலவும் ஜாதி அரசியலை வைத்து ஏகப்பட்ட படங்கள் வந்து இருந்தாலும் இந்த கிளாப் படம் அவைகளை நினைவூட்டாமல் கொடு போயிருப்பதே சாதனைதான். அப்படி ஒரு அக்சீவ்மெண்ட் செய்த இயக்குனர் பிரித்வி ஆதித்யாவிற்கு வாழ்த்துகள்.

மொத்தத்தில் கிளாப் – கைத் தட்ட வைக்கும் படம்

இந்த கிளாப் படம்  சோனி லைவ்வில் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.