கலர்’ஃபுல்லாக மாறிய சந்தானத்தின் ‘சபாபதி’

1

 

நாயகனாக தொடர்ந்து ஹிட் படங்களை வழங்கி முத்திரை பதித்து வரும் சந்தானம் நடிப்பில் காமெடி-குடும்ப சென்டி மென்ட் கலந்து உருவாகி யுள்ள ‘சபாபதி’ திரைப் படத்தை ஆர் கே என்டர்டெயின்மென்ட் சார்பில் சி ரமேஷ் குமார் தயாரிக்க, ஆர் ஸ்ரீநிவாச ராவ் இயக்கியுள்ளார்.

திரையரங்குகளில் நவம்பர் மாதம் வெளி யாகவுள்ள இத்திரைப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலர்ஸ் டிவி வாங்கி யுள்ளது. சந்தானம் படங் களுக்கு மக்களிடையே இருக்கும் வரவேற்பை கருத்தில் கொண்டு மிகப்பெரிய விலைக்கு ‘சபாபதி’ தொலைக்காட்சி உரிமையை கலர்ஸ் டிவி வாங்கியுள்ளது.

திக்கு வாயால் அவதிப் படும் வாலிபர் கதாபாத் திரத்தில் முதல் முறையாக இப்படத்தில் சந்தானம் நடித்துள்ளார். நகைச் சுவை நிறைந்த இந்த திரைப்படத்தில் தந்தை-மகனுக்கிடையேயான உறவு குறித்து அழகாக காட்டப்பட்டுள்ளது. சந்தானத்தின் நடிப்பு மிகவும் பேசப்படும் என்று படக்குழுவினர் தெரிவிக் கிறார்கள்.

எம் எஸ் பாஸ்கர், பிரீதி வர்மா, சாயாஜி ஷிண்டே, ‘விஜய் டிவி’ புகழ், சுவாமி நாதன், ‘காமெடி பஜார்’ மாறன் உள்ளிட்டோர் ‘சபாபதி’ படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள் ளனர்.

ஒளிப்பதிவை பாஸ்கர் ஆறுமுகம் கவனிக்க, படத்தொகுப்பை லியோ ஜான் பால் கையாண்டுள் ளார். சாம் சி எஸ் இசை யில் உருவாகியுள்ள ‘சபாபதி’-யின் சண்டைக் காட்சிகளை ஹரி தினேஷ் வடிவமைத்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.