காமெடி நடிகர் பெஞ்சமினுக்கு மாரடைப்பு: உதவி கேட்டு வீடியோ..

10

திருப்பாச்சி படத்தில் விஜய்யின் நண்பராக நடித்தவர் பெஞ்சமின்.  இவர் மேடை நாடக கலைஞராக இருந்தார். சேரன் இயக்கிய ‘வெற்றிக்கொடிகட்டு’ படத்தில்  நகைச்சுவை நடிகராக அறிமுகமானார்.  40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் பெஞ்சமின் சேலத்தில் வசித்து வந்தார்.

இந்நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள் ளார். மூன்று நாட்கள் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர் அந்த மருத்துவமனையில் மேல் அறுவை சிகிச்சைக்கான வசதிகள் இல்லாததால் பெங்களூரு நாராயணா ஹிருதயாலயா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

மருத்துவ சிகிச்சைக்காக திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களிடம் உதவி கோரியும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.