ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்ற முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை என்ற பெருமை தமிழகத்தின் சி.ஏ.பவானி தேவிக்கு (27 வயது) கிடைத்துள்ளது. இவரின் ஆரம்ப கால பயிற்சிக்காக இத்தாலிக்கு போக வேண்டிய சூழல் வந்த போது இயக்குனர் – நடிகர் சசிகுமார் ஒரு பத்திரிகை பேட்டியைப் பார்த்துட்டு 2 லட்சம் ரூபாய் ஸ்பான்சர் ஏற்பாடு செய்து கொடுத்தார்.
அவர் இப்போது ஹங்கேரியில் நடந்த உலக கோப்பை தொடரின் குழு கால் இறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்ற நிலையில், தரவரிசையில் மாறுதல் அடிப்படையில் டோக்கியோ ஒலிம்பிக் தனிநபர் சேபர் பிரிவில் பங்கேற்க பவானி தகுதி பெற்றார். அவருக்கும் சசிகுமாருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.