விஜய் சேதுபதி மீது விமர்சனம்.. போலீசில் புகார்..

15

நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிகெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையான 800 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து தந்து படத்திலிருந்து விலகிக் கொள்ளும்படி விஜய் சேதுபதி யை முத்தையா முரளிதரன் கேட்டுக் கொண்டார். அவரும் நன்றி வணக்கம் சொல்லி விட்டு விலகினார்.
இந்நிலையில் விஜய்சேதுபதி குடும்பத்தை பற்றி சமூக வலைதளங்களில் உலவும் தகாத விமர்சனங்கள் உலவ விடப்படுகின்றன.
அதைக் கண்டு விஜய்சேதுபதி ரசிகர்கள் கோபம் அடைந் தனர். சமூக வலை தளத்தில் தகாத விமர்சனங்களை பரவ விட்டவர்களை உடனடியாக கைது செய்ய கேட்டு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு தர்மபுரி தி.மு.க. எம்.பி. செந்தில்குமார் வலியுறுத்தி உள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.