சியான்கள் (பட விமர்சனம்)

54

 

படம்: சியான்கள்
நடிப்பு: கரிகாலன், ரிஷா ஹரிதாஸ், நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாக ராஜன், துரை சுந்தரம், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயண சாமி, இமை ராஜ்குமார்,
தயாரிப்பு: கி.கரிகாலன்
இசை: முத்தமிழ்
ஒளிப்பதிவு: பாபுகுமார் ஐ.இ.
இயக்கம்: வைகறை பாலன்

தேனி பக்கம் கிராமத்தில் வாழும் 7 பெரியவர்களின் நட்பையும் அவர்களின் ஆசைகள், குறும்புகள் போன்றவற்றை கண்முன் கொண்டு வந்து நிறுத்தம் கதை. வீட்டுக்கு வெளியே சுதந்திரமாக சுற்றும் இந்த பெரிசுகள் குடும்பத்தில் மகன், மருமகளிடம் படும் அவமானமதால் இரண்டு பெரிசுகளின் உயிரைப் பறிபோகிறது. மற்ற 5 பேரும் சென்னையில் டிவி நிகழ்ச்சிக்காக வருகிறார் கள். அதில் ஒருவர் கார் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுகிறார். அவரை இரண்டு நண்பர்கள் காப்பாற்ற முயல்கின்றனர். லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. அவர் உயிர்பிழைத்தரா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

 

ஹீரோக்களை.நம்பி படம் எடுக்கும் காலத்தில் இப்படி யொரு முயற்சியை செய்த இயக்குனரையும் அதை தயாரித்த தயாரிப்பாளரை யும் பாராட்ட வேண்டும்.

ஊர் பெருசுகளாக நடித்தி ருக்கும் . நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாக ராஜன், துரை சுந்தரம், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயண சாமி ஆகிய 7பேரும் ஒருவருக்கொருவர் சளைக்கமால் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கின்ற னர்
வாழ்க்கையில் ஒரு ஆசையா வது வைத்துக்கொள் ளுங்கள் அது உங்கள் ஆயுளை நீட்டித்து தரும் என்று மிலிட்டரி பெரிசு சொல்லும் வசனத்தில் ஒரு உண்மை பொதிந்திருக் கிறது.
படம் தொடங்கி சில நிமிடங் களிலேயே நளினிகாந்த் கார் விபத்தில் சிக்கியதும் ஒரு ஷாக் கொடுக்கும் இயக்கு னர் அதன் பிறகு பின்னணி பிளாஷ் பேக் காட்சிகளாக சிறிது சிறிதாக கிராமத்தில் பெருசுகள் அடிக்கும் லூட்டியை வாரி இறைத்தி ருப்பது திகட்டாத விருந்து.
விஷ ஊசி போட்டு பிள்ளைகள் தந்தையை கொள்வதும், கறிசோறுக் காக மருமகளிடம் பளார் அறை வாங்கி அவமானத்தில் மாமனார் தூக்கில் தூங்குவதும் பதற வைக்கும் காட்சிகள்.
கிளைமாக்சில் நடக்கும் நீயா நானா பாணியிலான பெருசுகள் இளசுகளின் ஆதங்கத்தை வெளிப்படுத் தும் காட்சியில் பேசும் அந்த தாயின் குமுறல் ஒரு நிமிடம் துக்கத்தை தொண்டையை அடைக்கச் செய்கிறது.
டாக்டராக நடித்திருக்கும் கரிகாலன் அதிகம் பேசாமல் அன்பை வெளிப்படுத்தி கவர்கிறார். ஹீரோயின் ரிஷாக்கு குறைவான காட்சிகள் என்றாலும் நிறைவு.
நளினிகாந்த் விமான பயண ஆசையில் உயிரை கையில் பிடித்திருப்பதையும் அந்த ஆசை நிறைவேறும்போது காட்டும் மகிழ்சியும் உணர்ச்சிகளின் வெளிப்பா டாக பிரகாசிக்கிறது.
இயக்குனர் வைகறை பாலன் காட்சிகளை அமைத்திருக்கும் விதத்தில் நேர்தியான படைப்பிற்கு முழு உழைப்பபையும் செலுத்தி இருப்பதை உணர முடிகிறது
இசை மற்றும் ஒளிப்பதிவு கூடுதல் பலம்

Leave A Reply

Your email address will not be published.