திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்காக தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த, 2019ம் ஆண்டு ரஜினிக்கு மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்தது.
கொரோனா ஊரடங்கு இருந்து வந்ததால் விழா தள்ளி வைக்கப்பட்டது.
ஏற்கெனவே சிவாஜி அமிதப்பஸ்டன் இந்த விருது பெற்றிருக்கி றார்கள்.
டெல்லியில் நடந்த விழாவில் ரஜினி காந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப் பட்டது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருதினை வழங்கினார். இவ்விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மந்திரி அனுராக் தாக்கூர், இணை மந்திரி எல்.முருகன் போன்ற வர்கள் பங்கேற்றனர்.
விழாவில் ரஜினிகாந்த குறித்த ப்ரோமோ வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் அமிதாப்பச்சன், மோகன் லால், ஏ.ஆர். ரஹ்மான், நடிகை குஷ்பூ, தயாரிப் பாளர் கலைப்புலி தாணு ரஜினிகாந்தை பாராட்டி பேசினர்.
தாதா சாகேப் பால்கே’ விருதை பெற்றுக் கொண்டு ரஜினிகாந்த் பேசியது:
விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி.. தாதா சாகேப் பால்கே விருதை எனது குருவான கே.பால சந்தருக்கு சமர்பிக்கிறேன். என்னை அடையாளம் காட்டிய நண்பர் பகதூர், அண்ணன் சத்யநாராய ணாவுக்கு நன்றி. என்னை வாழ வைத்த தெய்வங் களான தமிழக மக்களுக்கு நன்றி. இந்த விருதுக்கு காரணம் தமிழக மக்கள்தான்” என்ன குறிப்பிட்டார்.
ரஜினியுடன் மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷ் உடன் சென்றனர்.

