பாரதிராஜா படங்களின் ஒளிப்பதிவாளர் நிவாஸ் மரணம்

18

1980 முதல் தமிழ் திரையுலகில் முன்னணி ஒளிப்பதிவாளர் திரு.பி.எஸ்.நிவாஸ் வயது 80  உடல் நல பாதிப்பு ஏற்பட்டு நேற்று மரணம் அடைந்தார்.

பாரதிராஜா இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடித்த 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், கிழக்கே போகும் ரயில், நிறம் மாறாத பூக்கள்,  ஸ்ரீதரின் இளமை ஊஞ்சலாடுகிறது.  ரஜினிகாந்தின் தனிக்காட்டு ராஜா, கே.விஸ்வநாத், கமல்ஹாசனின்  சலங்கை ஒலி, பிரபுவின் கோழிகூவுது, ராமராஜனின் ஊரு விட்டு ஊரு வந்து உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மலையாளம், தெலுங்கு, இந்தி படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

பாரதிராஜா நடித்த கல்லுக்குள் ஈரம் படத்தை டைரக்டு செய்து ஒளிப்பதிவும் செய்தார். தமிழில் எனக்காக காத்திரு, நிழல் தேடும் நிஜங்கள், செவ்வந்தி ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

ஸ்ரீகுமாரன் தம்பி இயக்கத்தில் மோகினி ஆட்டம் என்ற மலையாள படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது பெற்றார்.

பி.எஸ்.நிவாஸ் மறைவுக்கு தமிழ், மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.