தாதா 87 பட கதை திருட்டு : இயக்குனர் விஜய் ஶ்ரீ ஜி அதிர்ச்சி

1

 

தாதா 87   படத்தின் கதை திருடப்பட்டிருபதாக அப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர்  விஜய் ஶ்ரீ ஜி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளார்.

இதுபற்றி அவர்.கூறிய தாவது:

கமலஹாசனின் அண்ணன் சாருஹாசனை வைத்து நான் எழுதி இயக்கி ஜி மீடியா கலை சினிமாஸ்வுடன் இணைந்து தயாரித்த படம் தாதா 87.

தற்சமயம் பவுடர் ,பப்ஜி படங்களை இயக்கி வருகிறேன். இன்று காலை YouTube நடிகர் சாய்குமார் நடிப்பில் ஒன் பை டூ என்ற பெயரில் தாதா87 படத்தின் ரீமேக் செய்யப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் .

ரஜினியின் காலா டீசருடன் தாதா 87 படத்தின் டீசர் உலக அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது அனைத்து சினிமா ரசிகர்களும் அறிவார்கள் அதே டீசரில் சாருஹாசன் காட்சிக்கு பதில் சாய்குமார் சில காட்சிகள் மட்டும் படமெடுத்து இன்று டீஸராக வெளியிட்டுள் ளார்கள்.இதனை பார்த்து மிகுந்த மன உளைச்சல் அடைந்தேன்

1/2 படக்குழு என்னுடைய கற்பனையும் என் உழைப்பையும் திருடும் செயலில் இந்த சம்பவம் இருக்கிறது என்னிடம் முறையாக எந்தவிதமான அனுமதியும் பெறாமல் செய்திருப்பது சாய்குமார் போன்ற மிகப்பெரிய நடிகர் துணையுடன் நடந்து இருப்பது வருந்தத்தக்கது

முறையாக அனுமதி பெற்று என் கதையின் கருவை என் பெயரை பயன்படுத்தாமல் வேறு ஒருவர் சொந்தம் கொண்டாடுவது ஒருவருடைய பெயருக்கு முன் உள்ள இனிஷியல் ஐ மாற்றுவதற்கு சமமானது.என பெரிய வர்கள் கூறுவார்கள்

தற்போது இதுபோல் பல படங்களுக்கு தொடர்ந்து கதை திருட்டு நடைபெற்று வருகிறது .
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் படமாக தாதா87 படத்தின் கருவை சிதைத்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஜு மீடியா கம்பெனி வழக்கறிஞர்கள் அறிவுறுத்தலின் படி நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம் இதை பற்றி விரிவான செய்திகளை விரைவில் அறிவிப்பேன்

இவ்வாறு விஜய் ஸ்ரீ ஜி கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.