நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா பிரிந்து வாழ முடிவு

0

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தம்பதிகள் பிரிந்துவாழ முடிவு செய்துள்ளதாக அறிவித்திருக்கின்றனர்.

தனுஷ், ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா காதலித்து,  இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்  செய்துக்கொண்டனர். கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் நாள் திருமணம் நடந்தது.  இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக தனுஷ் அறிவித்து தனது இணைய தள  பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியதாவவது:

18 வருடங்களாக நண்பர், தம்பதி, பெற்றோர் மற்றும் நலம் விரும்பியாக நாங்க இருந்து இருக்கிறோம். எங்கள் வாழ்க்கை பயணம் பல புரிதல்களோடு நெடுந்தூர பயணமாக இருந்தது.

இன்று முதல் எங்களுடைய பயணம் வெவ்வேறாக இருக்க முடிவு செய்து இருக்கிறோம். நானும் ஐஸ்வர்யாவும் சேர்ந்து முடிவு எடுத்து இருக்கிறோம். எங்கள் முடிவுக்கு மரியாதை கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு  அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.