ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய படம் 3. இதில் தனுஷ் கதாநா யகனாக நடித்தார். இப்படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். இந்த கூட்டணியில் உருவான பாடல்கள் சூப்பர் ஹீட் ஆகின. அடுத்த தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’, ‘மாரி’, ‘தங்கமகன்’ ஆகிய படங்களுக்கு அனிருத் இசை அமைத்தார். மேலும் தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர்நீச்சல்’, விஜய் சேதுபதி, நயந்தாரா நடித்த ‘நானும் ரவுடிதான்’ ஆகிய படங்களுக்கும் அனிருத் இசை அமைத்தார்.
சூப்பர் ஹிட் காம்பினேஷாக வலம் வந்த தனுஷ், அனிருத் 6 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் நடிக்கும் டி44 படத்தில் மீண்டும் இணைகின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.
இன்று அனிருத் பிறந்தநாள். இதையொட்டி டி44 என்ற புதியபடத்தின் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மற்ற டெக்னீஷியன்கள். நடிகர் நடிகைகள் விவரம் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.