ஹாலிவுட் படத்தில் தனுஷ்

16

தனுஷ் தமிழ் படங்கள் தவிர ராஞ்சனா, ஷமிதாப் ஆகிய இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அந்த்ரங்கி ரே என்ற இன்னொரு இந்தி படத்திலும் நடிக்கிறார். ஏற்கனவே எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகீர் என்ற ஆங்கில படத்தில் நடித்து இருக்கிறார்.

தற்போது ‘தி க்ரே மேன்’ என்ற பெயரில் தயாராகும் ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தில் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் நாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடிக்கின்றனர்.

அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் உள்ளிட்ட படங்களை இயக்கிய அந்தோனி, ஜோ ரூஸோ ஆகியோர் டைரக்டு செய்கிறார்கள்.

தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரயன் காஸ்லிங், கிரிஸ் ஈவான்ஸ் நடிக்கும் ரூஸோ சகோதரர்கள் இயக்கும் படத்தில் இணைவதில் மகிழ்ச்சி. இந்த படத்தில் பணியாற்றுவதை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.

உலகம் முழுவதும் உள்ள எனது ரசிகர்களுக்கு நன்றி. அன்பை பரப்புங்கள் ஓம் நமச்சிவாய’ என்று கூறியுள்ளார். ஹாலிவுட் படத்தில் நடிக்கும் தனுசுக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.