கர்ணன் படம் ஏப்ரலில் தியேட்டரில் ரிலீஸ்..

டீஸர் வெளியிட்டு அறிவித்த எஸ்.தாணுவுக்கு தனுஷ் நன்றி கடிதம் .

70

வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் படம் கர்ணன். தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். ரஜிஷா விஜயன் யோகிபாபு, நட்டி, லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

தேயிலை தோட்ட தொழிலா ளர்கள் பற்றிய கதையாக உருவாகி இருக்கும் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் தியேட்ட ரில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.


கர்ணன் படத்தை தியேட்டரில் வெளியிடும் தயாரிப்பாளர் எஸ்.தாணுவுக்கு வாழ்த்தும், நன்றியும் தெரிவித்திருக்கிறார் தனுஷ். அவர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஏப்ரல் மாதம் கர்ணன் படம் தியேட்டரில் வெளியாகிறது என்பது இன்றைய தேவை யான விஷயம் மட்டுமல்ல ஊக்கம் தருவதாகவும் உள்ளது. தியேட்டர் அதிபர்கள், டிஸ்டிரிபியூட்டர்கள் மற்றும் அவர்களை சார்ந்து வாழும் அனைவரின் நலனை கருத்தில் கொண்டு இப்படத்தை தியேட்டரில் வெளியிடும் தாணு சாருக்கு நன்றி. என்னுடைய ரசிகர்கள் சார்பில் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் எனது அன்பு வணக்கம், அன்பை பரப்புங்கள்.
இவ்வாறு தனுஷ் தெரிவித்திருக்கிறார்.

ஏப்ரலில் கர்ணன் வெளியாவது குறித்து டீஸர் வெளியிட்டு அறிவித்திருக்கிறது படக் குழு.

Leave A Reply

Your email address will not be published.