தனுஷின் 43வது படம் தொடங்கியது

65

தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்திலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் கார்த்திக் நரேன் இயக்கும் தனது 43வது படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார் தனுஷ். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்கும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், ஸ்மிருதி வெங்கட், சமுத்திரகனி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இதன் பணிகள் பூஜையுடன் நேற்று தொடங்கியது.

Leave A Reply

Your email address will not be published.