தனுஷின் “கர்ணன்” பட பாடல் ரிலீஸ்

0

சின்ன சிவாஜி ரேஞ்சுக்கு கோலிவுட்டில் வருத்தி உழைக்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இந்த படம் ஏப்ரல் 6ஆம் ரிலீஸாக உள்ள நிலையில் கர்ணன் தயாரிப்பாளர் கலைப்பு எஸ்.தாணு, இந்த படத்தை தான் பார்த்து விட்டதாகவும் இதில் தனுஷின் அறிமுக காட்சி என்னை அதிர வைத்தது என்றும், இதுவரை ரஜினிக்கு கூட இப்படி ஒரு அறிமுக காட்சி கிடைக்கவில்லை என்றும் தெரிவிச்சிருந்தார்.. சமீபத்தில் வெளியான சந்தோஷ் நாராயணன் இசையில் மாரியம்மாள் பாடிய ’கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடல் மிகப் பெரிய ஹிட்டாகி நிலையில் ‘கர்ணன்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குநரிடம் நம்ம கட்டிங் கண்ணையா பேசிய போது கிடைத்த தகவல்களிது :

” புதுசா சொல்ல ஒண்ணுமில்லை.. ஒரு பாடலுக்கே இம்புட்டு எகிறலென்றால் படம் முழுக்க பரவசபடுத்தும் என்பது மட்டுமே நெசம். எனக்கு முக்கியமான, எனது இதயத்துக்கு நெருக்கமான படமிந்த கர்ணன்.’அதற்குள் கொடியன்குளம் கலவரம் பற்றியது., தென் மாவட்டக் கலவரங்கள் பற்றிய படமிது என்று சொல்வதில் உண்மை கொஞ்சமும் இல்லை இந்த கர்ணனுக்கு சில உண்மைச் சம்பவங்களும் இருக்கும். இந்த படத்தோட ரிலீஸூக்கு தாணு சார் ஏகப்பட்ட ஐடியா வச்சிருக்கார்.. அதுலே ஒண்ணு தனுஷ் சார் முகத்தைவ் வரையும் இளம் பெண்களுக்கென விசேஷப் போட்டி.. இன்னொன்று ரிலீஸான மூன்று நாட்கள் தியேட்டரில் கிராமியக் கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்தலாமா என்றும் யோசிக்கிறார்..

-என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே இதோ பண்டாரத்தி புராணம்! நெக்ஸ்ட் சாங் ரிலீஸாயிடுச்சு பாருங்க.. கேளுங்க -ன்னு பகிர்ந்து இருக்கும் பாடல் இதோ: https://www.youtube.com/watch?v=oAa5jfKylgc&feature=youtu.be

Leave A Reply

Your email address will not be published.