’அண்ணாமலை’ பட வசனகர்த்தா சண்முகசுந்தரம் எழுதிய புத்தகத்தை முதல்வர் வெளியிட்டார்

22

 

தமிழ், தெலுங்கு, கன்னடம் இந்தி என பல மொழிகளில் திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியவர், ரஜினி காந்த் நடித்த அண்ணாமலை படத்தின் வசனகர்த்தா, எழுத் தாளர், இயக்குனர், டி.கே.சண் முகசுந்தரம். இவர் எழுதிய பிரியா, லீலா கதை திரைக் கதை வசன புத்தகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனி சாமி வெளியிட செய்தி துறை அமைச்சர் கடம்பூர் சி.ராஜூ பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியின்போது வேல்ஸ் பல்கலைகழக வேந்தர் ஐசரி கணேஷ், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.முரளி ராம சாமி, இயக்குனர்கள் சங்க செயலாளர் ஆர்.வி.உதய குமார், எழுத்தாளர்கள் சங்க செயலாளர் மனோஜ்குமார் சின்னத்திரை சங்க தலைவர் மனோபாலா சின்னத்திரை, இயக்குனர்கள் சங்க பொதுச் செயலாளர் சி.ரங்கநாதன், மற்றும் தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.