50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் உள்ளிட்ட பலவேறு திரையுலகில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், பட ரிலீஸ் போன்ற தகவல்களை மூத்த பத்திரிகை தொடர்பாளர் ஃபிலிம்நியூஸ் ஆனந்தன் அனைவருக்கும் இலவசமாக வழங்கி வந்தார். அவர் மறைந்த பிறகு அந்த பணியை அவரது மகன் டைமண்ட் பாபு செய்து வருகிறார் 2020ம் ஆண்டின் திரையுலக சமபவங்கள் மற்ற்றும் பட வெளியீடுகள் அடங்கிய தொகுப்பை புத்தாண்டு தினத்தன்று தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் நடிகை குஷ்பு வெளியிட நடிகை சுஹாசினி பெற்றுக்கொண்டார்.
சினிமா தொகுபை வெளியிட்ட அனைவருக்கும் டைமண்ட் பாபு ந்ன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.’ இந்த ஆண்டு மறைந்த என் அப்பா பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் 94வது பிறந்த நாள். அவர் தனது வாழ்நாளில் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டில் கட ந்த ஆண்டு சினிமா தொகுப்பை இலவசமாக கொடுக்கும் அரும்பணி செய்தார். அப்பா விட்டு சென்ற பணியை நான் அவர் ஆசீர்வாதத்தால் செய்கிறேன்..2020ம் ஆண்டு சினிமா தொகுப்பு புத்தகத்தை தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராமசாமி முன்னிலையில் நடிகை சுஹாசினி வெளியிட நடிகை குஷ்பு பெற்றுக்கொண்டார். அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு டைமண்ட் பாபு கூறி உள்ளார்.