இயக்குனர் மற்றும் நடிகர் மணிவண்ணன் பிறந்த நாள்

6

இயக்குனர் மற்றும் நடிகராக திகழ்ந்த மணிவண்ணன் பிறந்த நாள் (ஜூலை 31, 1954 – ஜூன் 15, 2013)? மணிவண்ணன் 400 -க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும், 50 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவிடம் சேர்ந்து உதவி இயக்குனராக பணிபுரிந்த மணிவண்ணன், பின்னர் தனியாக திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார். பெரியார் கொள்கைகளிலும், இடதுசாரி கொள்கைகளிலும் தீவிர ஈடுபாடு கொண்ட மணிவண்ணன், ஆரம்பக் காலங்களில் திமுக அபிமானி. பின்னர் வைகோ மதிமுகவை தொடங்கியபோது அவருக்கு ஆதரவளித்தார். கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். அந்த மண்ணுக்கே உரிய நக்கல், நையாண்டி மணிவண்ணனிடம் தூக்கலாக காணப்படும். நடிகர் சத்யராஜுடம் மிகவும் நெருக்கமாக நட்பு பாராட்டி வந்தார். இருவரும் இணைந்த அமைதிப்படை, மணிவண்ணனின் திரையுலக வாழ்வில் மாபெரும் வெற்றிபடமாக அமைந்தது. இயக்குனர், நடிகர், கதாசிரியர் என்ற பன்முக வித்தகரான அவர், தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பதித்தவர். திரைப்படங்களில் அவர் பேசிய பல அரசியல் வசனங்கள் தற்போது சமூக ஊடகத்தளங்களில் மீம்ஸ்களாக உலா வருகின்றன.

சிறு அகவையிலிருந்தே அரசியல் பின்னணியில் வளர்ந்த மணிவண்ணன் நக்சலைட்டுகளின் தலைவராக இருந்த சாரு மஜும்தாரைச் சந்தித்தவர். நாத்திகம் மற்றும் திராவிடக் கொள்கையில் பிடிப்புள்ள மணிவண்ணன் தனியீழப் போராட்டத்தையும் விடுதலைப் புலிகளையும் ஆதரித்தவர். மணிவண்ணன் ஒரு தீவிர வாசிப்பாளர். பொது உடைமை தத்துவங் களிலும், பெரியாரின் கருத்தியலிலும் ஆழ்ந்த பற்றுள்ளவர். இது அவரது அரசியல் படங்களில் வெளிப்படும்

Leave A Reply

Your email address will not be published.