அகத்தியன் மகள் நிரஞ்சனி-தேசிங் பெரிய சாமி திருமணம்..

16

காதல் கோட்டை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இயக்குநர் அகத்தியன். இவரது  இளைய மகள் நிரஞ்சனி. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்தார். இப்பட இயக்குநர் தேசிங் பெரியசாமியை திருமணம் செய்யவுள்ளார்.

துல்கர் சல்மான், ரிது வர்மா, நிரஞ்சனி அகத்தியன் நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் கடந்த வருடம் பிப்ரவரி 28 அன்று வெளியானது. படப்பிடிப்பின்போது  இயக்குநர் தேசிங்கும் நடிகை நிரஞ்சனியும் காதல் மலர்ந்தது. இவர்கள் திருமணம்  செய்ய முடிவு செய்துள்ள்னர்.

தேசிய விருது பெற்ற இயக்குநர் அகத்தியனின் இளைய மகளான நிரஞ்சனி, தேசிங் பெரியசாமியைத் திருமணம் செய்யவுள்ளதை அகத்தியனின் மூத்த மகள் கிருத்திகாவின் கணவரும் இயக்குநருமான திரு ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்?? கல்யாணம்! என ட்வீட் செய்து திருமணப் பத்திரிகையின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

அகத்தியனின் எல்லா மாப்பிளைகளும் இயக்குநர் மாப்பிளைகள் என நிரஞ்சனியின் சகோதரியும் நடிகையுமான விஜயலட்சுமி இன்ஸ்டகிராமில் பதிவு எழுதி இருவருடைய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

நிரஞ்சனி நடித்த முதல் படம் – கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இதற்கு முன்பு வாயை மூடி பேசவும், சிகரம் தொடு, காவியத் தலைவன், கபாலி போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.