வீரபாண்டிய கட்டபொம்மன்’ இயக்குனர் பி.ஆர். பந்துலு நினைவு நாள் இன்று

4

 

இயக்குனர் பி.ஆர்.பந்துலு.1911 ஆண்டு ஜூலை 26ம் தேதிபிறந்தார். சாதனை படைத்த படங்களை தமிழில் தயாரித்து இயக்கி இருக்கி றார். இவரது நிஜப்பெயர் பூதகூர் கிருஷ்ணையா பந்துலு. இவரது மனைவி ஆர். அந்தலம்மாள். இவருக்கு பி.ஆர்.விஜய லட்சுமி, பி.ஆர்.ரவிசங்கர் என ஒரு மகள், மகன் இருக்கின்றனர்.


நடிகர் திலகம் சிவாஜிக்கு பெருமை சேர்த்த வீர பாண்டிய கட்டபொம்மன், கப்பலோடிய தமிழன், கர்ணன் போன்ற பல படங்களையும், இன்றளவும் பேசப்படும் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், ரகசிய போலீஸ் 115 போன்ற படங்களையும் இவைகள் தவிர ஸ்கூல் மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களை இயக்கியதுடன் பல படங்கள் தயாரித்தும் இருக்கிறார்.
டாக்டர் சாவித்ரி, நாம் இருவர், விஜயலட்சுமி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.
தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார்.
2010ம் ஆண்டு கர்நாடகாவில் இவரது நூற்றாண்டு விழா ஒரு வருடம் கொண்டாடப்பட்டது.
எம்.ஜி.ஆர், சிவாஜி. என்.டி. ஆர், நாகேஸ்வரராவ் ஆகியோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார் பி.ஆர். பந்துலு. இவர்1974ம் ஆண்டு மறைந்தார். அக்டோபர் 8ம் தேதி இவர் மறைந்தார்.

மறக்கமுடியாத பல படங்களை தந்த பி. ஆர்.பந்துலுவை தமிழ் திரையுலகமும் என்றைக்கும் மறக்காது என்பதில் சந்தேகமில்லை. அவரது நினைவு தினமான இன்று நினைவை போற்றுவோம்.

 

Leave A Reply

Your email address will not be published.