டைரக்டர் பாலா டைவோர்ஸ்!

9

கோலிவுட்டில் டாப் 5இல் இடம் பிடிக்கும் இயக்குநர் பாலா அவருடையை மனைவி முத்து மலரை விட்டு சட்டப்படி பிரிந்து விட்டார் என்றும் இரண்டு பேரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுக் கொண்டதாக தகவல் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் பாலா. சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பிறகு, நந்தா, பிதாமகன், நான் கடவுள் என பல வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றார். சூர்யா, விக்ரம், விஷால், ஆர்யா போன்றவர்களை நல்ல நடிகர்களாக மாற்றியவர் பாலா. இவரின், படங்களில் நடிக்க பல கதாநாயகர்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தயாரிப்பாளார், இயக்குநர் என பல அவதாரங்களை கொண்டுள்ள பாலா. சினிமாவில் இன்றும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்.தற்போது மீண்டும் பாலா – சூர்யா கூட்டணியில் ஒரு படம் தயாராகி வருகிறது. ‘நந்தா’, ‘பிதாமகன்’ படங்களுக்குப் பிறகு பாலா – சூர்யா கூட்டணி இணைந்திருப்பதால் படத்துக்கு ஏற்கெனவே பல எதிர்பார்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.

இந்நிலையில்தான் யாரும் எதிர்பாராத வகையில் இயக்குநர் பாலாவும் அவர் மனைவி முத்து மலரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றிருக்கிறார்கள் என்று தகவல். கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் (5.3.2022) இருவரும் சட்டபூர்வமாக சுமூகமான முறையில் பிரிந்து விட்டார்களாம்ன்.

இயக்குனர் பாலாவுக்கும் முத்துமலருக்கும் கடந்த 2004ம் ஆண்டு மதுரையில் திருமணம் நடந்தது. 17 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

பாலாவின் விவாகரத்து விவகாரம் கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.