டைரக்டர் ஏ. பீம்சிங் நினைவஞ்சலி

22

ஆந்திர மாநிலம், சித்துாரில், 1924 அக்., 15ம் தேதி, ராஜபுத்திர வம்சத்தில் பிறந்தவர், ஏ.பீம்சிங். அழுத்தமும், ஆழமும் நிறைந்த திரைப்படங்களைத் தருவதில் வல்லவர். இயக்குனர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் திறனோடு விளங்கிய ஒரு திரைக் கலைஞன்.

தமிழ்த் திரையுலகில் நீண்ட கால அனுபவம்.நாற்பதுகளில் தொடங்கி எழுபதுகள் வரை சுறுசுறுப்பாக இயங்கியவர்.சாகா வரம் பெற்ற பல படங்களுக்குச் சொந்தக்காரர்.

தான் இருக்குமிடம் தெரியாத அளவிற்கு எளிமையானவர். நல்ல கணவர்.கிருஷ்ணனின் சகோதரியை மணந்து எட்டு குழந்தைகளுக்குச் சொந்தக்காரர்.நடிகை சுகுமாரியை மணந்து ஒரு வாரிசையும் தந்தவர். நடிகர் திலகத்தின் திறமைகளை முழுதாக வெளியே கொண்டு வந்தவர் என பல திறமைகளை தன்னகத்தே கொண்ட பீம்சிங்கை தமிழ்த் திரையுலகம் அவ்வளவு சீக்கிரம் மறக்காது.

சிறு வயதிலேயே, இவரது குடும்பம் சென்னையில் குடியேறியது. புரசைவாக்கம்எம்.சி.டி., முத்தையா பள்ளியில் கல்வி பயின்றார். இயக்குனர்கள் கிருஷ்ணன் – பஞ்சுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். ‘எடிட்டிங்’ நுட்பத்தையும் கற்றுக் கொண்டார். 1954ல், அம்மையப்பன் என்ற படத்தை இயக்கினார்.

தொடர்ந்து, பாவமன்னிப்பு, பாசமலர், பாகப் பிரிவினை, பார்த்தால் பசி தீரும் போன்ற, ‘ப’ வரிசையில் பற்பல வெற்றிப் படங்களைத் தந்தார். ஏராளமான தமிழ்ப் படங்கள் தவிர, ஹிந்தி – 18; தெலுங்கு – எட்டு; மலையாளம் – ஐந்து மற்றும் ஒரு கன்னடப் படத்தையும், இவர் இயக்கியுள்ளார்.

‘புத்தா பிலிம்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கி, பல படங்களையும் தயாரித்துள்ளார். 1978 ஜன., 16ம் தேதி, தன் 54வது வயதில், உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இறவா புகழ் பெற்றவரின் நினைவு திஅன் காலமான தினம் ஜனவரி 16.

Leave A Reply

Your email address will not be published.