கதைக்கு பொருத்தமாக அமைந்த சவுக்கார் ஜானகி..

இயக்குனர் கண்ணன். நடிகர் சந்தானம் பாராட்டு

23

எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி ஜெமினி, ஜெய்சங்கர், ரஜினி கமல் போன்றவர்களுடன் நடித்து இன்றைய இளைய தலைமுறை நடிகர்களுடனும் நடித்து வருகிறார் சவுகார் ஜானகி.


ஆர். கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்திருக்கும் படம் பிஸ்கோத். இதில் அனாதை ஆசிரமத்தில் தங்கி இருக்கும் பாட்டியாக நடித்திருக்கிறார் சவுகார் ஜானகி. கதைக்கு இடைவேளை, கிளைமாக்ஸ் எல்லாம் இவர் சொல்லும் கதையின் அடிப்படையி லேயே நடக்கிறது. கதை சொல்லியாக வரும் சவுகார் ஜானகி, சந்தானம் வாழ்வில் என்ன நடக்கும் என்பதை முன்னதாகவே கதையாக சொல்கிறார். இவரது வேடம் படத்துக்கு முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.


சவுகார் ஜானகியின் நடிப்பை இயக்குனர் ஆர்.கண்ணன் வெகுவாக பாராட்டினார். அவர் கூறும்போது,சவுகார் அம்மா தீபாவளிக்கு இங்கு வந்து சந்திபாதாக இருந்தது அவர் பெங்களுரில் இருக்கி றார். கொரோனா கட்டுப் பாடு காரணமாக வர முடிய வில்லை. எல்போருக்கும் வாழ்த்தை சொல்லச் சொன்னார்.
எந்த கதாபாத்திரத்துக்கு ஒன்றி போவது என்பது சிலரால்தான் முடியும். அந்த வகையில் சவுகார் ஜானகியம்மாவின் நடிப்பு பிஸ்கோத பட கதைக்கு பலம் சேர்ப்பதாக உள்ளது’ என்றார்.
நடிகர் சந்தானம் கூறும்போது, ’படப்பிடிப்பில் சவுகார் ஜானகி அம்மாவிடம் கதை கேட்பதுபோல் நடிக்கலாம் என்று தோன்றவே இல்லை அவர் கதை சொல்லும்போது அப்படியே அதில் லயிக்க வேண்டியதாக இருந்தது. பாட்டியிடம் கதை கேட்ட அனுபவம் மீண்டும் என் நினைவில் நிழலாடியது, அவருடன் நடித்தது வாழ்வில் மறக்க முடியாதது’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.