இயக்குநர் கர்ணன் காலமான தினமின்று!

1

வீரபாண்டிய கட்டபொம் மனைப் போன்ற கம்பீரம், முறுக்கிய வெள்ளை மீசை, எளிமையான ஆடை, புருவங்களுக்கிடையே குங்குமம். அவர்தான் கர்ணன். அமரர் எம்ஜிஆரின் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன், கற்பகம், கைகொடுத்த தெய்வம், ரஜினியின் பொல்லா தவன், கமல் நடித்த சிம்லா ஸ்பெஷல் உள்ளிட்ட சுமார் 150 படங்களுக்கு ஒளிப்பதி வாளராக பணியாற்றி யவர் இந்த கர்ணன். காலம் வெல்லும், எங்க பாட்டன் சொத்து, ஜம்பு, இரட்டைக்குழல் துப்பாக்கி உள்ளிட்ட 25 படங்களை இயக்கியும் இருக்கிறார்

தானே சொந்தமாக படம் தயாரித்து இயக்க ஆரம்பித்த பிறகு, கர்ணன் 20 குதிரைகள் 10 கார் களை சொந்தமாக வாங்கி சேஸிங் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை எடுத்தாராம். அதே போல தண்ணீருக் கடியில் படம் பிடிப்பதில் அந்தக் காலத்திலேயே அசத்தியவர் இவர். கர்ணன். புகழ்பெற்ற நடிகைகளான கே.ஆர். விஜயா, மாதவி ஆகிய இருவரையும் திரையுலக த்திற்கு அறிமுகப்படுத்திய வரும் கர்ணன்தான்.

திரையுலகுக்கு வரவேண்டுமென்று விரும்பி வந்தவரில்லை இவர். இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விருப்பப்பட்டார். பெற் றோர் விடவில்லை. இவர் சென்னை, கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். அந்தக் காலத்திலேயே சினிமாத்துறையைச் சார்ந்த அநேகர் கோடம் பாக்கத்தில் குடியிருந் தார்கள். அதனால் சுற்றுப்புற சூழ்நிலைகள் காரணமாக இவருக்கும் சினிமாத் துறையின் மீது ஆர்வம் ஏற்பட்டு கேமரா மேனாகி சாதனைப் படைத்தவரின் நினைவு நாளின்று.

Leave A Reply

Your email address will not be published.