இயக்குனர் பி.மாதவன் நினைவு நாள் இன்று..

17

 

70, 80 களில் பி.மாதவன் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். இவர் இயக்கியுள்ள 49 படங்களில் 39 படங்களின் தயாரிப்பாளரும் இவரே.அருண் பிரசாத் மூவிஸ் என்னும் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களைத் தயாரித்தார். ஆரம்ப காலங்களில் இயக்குநர் டி.ஆர்.ரகுநாத்திடம் உதவி இயக்குநராகவும் பின்னர் ஸ்ரீதரிடம் துணை இயக்குநராகவும் பணிபுரிந்தார். நடிகராக வேண்டும் என்ற ஆசையோடு திரையுலகில் நுழைந்தவர் உதவி இயக்குநராகவும், அசோசியேட் இயக்குநராகவும் பணியாற்றி இயக்குநராக உயர்ந்தவர். இயக்குநராக ஆகும்போது முப்பது வருட அனுபவம் இருந்தவர்.

இவர் இயக்கத்தில் வந்த சில முக்கியப் படங்கள்..தெய்வத்தாய், வியட்நாம் வீடு, தங்கப்பதக்கம், கண்ணே பாப்பா, குழந்தைக்காக.

1961-இல் “மணி ஓசை” என்ற படத்தின் மூலம் இயக்குநராக ஆனார். விஜயகுமாரி, கல்யாண்குமார் நடித்த இப்படத்தைத் தயாரித்தவர் ஏ.எல்.ஸ்ரீநிவாசன். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. ஆனால் ‘மணி ஓசை’ படத்தைப் பார்த்த சிவாஜிகணேசன் இவரை ரொம்பவும் பாராட்டினார். இதுமாதிரி கதாபாத்திரமெல்லாம் எப்போதாவது ஒரு முறைதான் கிடைக்கும். கல்யாண்குமார் கொடுத்து வைத்தவன் என்று சிவாஜி சொன்னபோது இவர் மகிழ்ந்துபோனார்.

முதல் படம் இயக்கிக்கொண்டிருந்தபோதே கிடைத்த படம்தான் ‘அன்னை இல்லம்’. முதல் படம் தோல்வி யடைந்ததால், ‘’அன்னை இல்லம்’’ படத்தை அக்கறையோடு சிரமப்பட்டு இயக்கினார். இப்படம் 100 நாள் ஓடி வெற்றிப் படமானது. அப்போதுதான் ஆர்.எம்.வீரப்பன் இவரை அழைத்து ‘சத்யா மூவிஸ்’ தயாரித்த ‘’தெய்வத்தாய்’’ படத்தை இயக்கும் பொறுப்பைக் கொடுத்தார்.

இவர் எம் ஜி ஆர் ஃபிலிம் சொசைட்டியின் தலைவராகவும், நிர்வாகியாகவும் இருந்தார். நேஷனல் ஃபிலிம் தயாரிப்பின் குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்

1992 இதே டிசம்பர் 16ல் காலமானார்.

Leave A Reply

Your email address will not be published.