நம்பிராஜ் இயக்கும் ” யாரது” படத்தின் கிளைமேக்சில் புதுமை

1

நம்பிராஜ் இயக்கத்தில்
வி.ரவி – மதுஸ்ரீ நடிக்கும்
” யாரது” படத்தின்
கிளைமேக்சில் புதுமை

“சமுதாயத்தில் செல்வாக்கு மிக்க மூவரால் மக்கள் இன்னல் களுக்கு ஆளாகின்றனர். இவர்களை சாட்சியுடன் கைது செய்ய இன்ஸ் பெக்டர் ரவி களம் இறங்கு கிறார். ஆனால் அந்த மூவரும் ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் கொலையா கின்றனர்.
ஏன்? எப்படி? என்ற கேள்விக்குறியோடு மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் இன்ஸ்பெக்டர் ரவி தீவிர விசாரணை செய்கிறார். அப்பொழுதுதான் காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சம்பவம் நடைபெறுகிறது. படத்தில் நடித்தவர்களுக்கு மட்டுமல்ல படம் பார்ப்ப வர்களுக்கும் வியப்பூட்டும் வண்ணம் இந்தப் படம் இருக்கும் என்கிறார் ” இயக்குனர் நம்பிராஜ். இவர் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்த தனது அனுப வத்தை கொண்டு இயக்கி உள்ளார்.

வி.ஆர். இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் ஏகனாபுரம் ரவி தயாரித்துள்ள ” யாரது ” திரைப்படத்தில்
இன்ஸ்பெக்டராக வி. ரவி, மதுஸ்ரீ, போஸ் வெங்கட், பெசன்ட்நகர் ரவி, வையாபுரி, காளியப்பர், போண்டாமணி, பெஞ்சமின், விஜய்கிருஷ் ணராஜ், அனிதா, ஜானகி, ஜெயமணி ஆகியோருடன் வடத்தில் கே. பாக்யராஜ் நடித்துள்ளார்.

திண்டுக்கல் , சின்னா ளபட்டி, சென்னையில் வளர்ந்துள்ள இதற்கு சபேஷ் — முரளி இசையை யும், ரவிசுந்தரம் கேமராவையும், கோபி கிருஷ்ணா படத்தொகுப் பையும், ஆக்சன் பிரகாஷ் சண்டை பயிற்சியையும், நோபல் நடன பயிற்சியை யும், கவனித்துள்ளனர்.

கதை திரைக்கதை வசனம் எழுதி நடிகர் நம்பிராஜ் இயக்கி உள்ளார்

பிஆர்ஒ விஜயமுரளி,
கிளாமர் சத்யா.

Leave A Reply

Your email address will not be published.