பழம்பெரும் இயக்குனர் ப.நீலகண்டன் நினைவு தினம் இன்று

12

 

விழுப்புரத்தில் 1916ம் ஆண்டு அக்டோபர் 2ந் தேதி பிறந்தார். கலைமீது ஆர்வம் கொண்ட நீலகண்டன் நாடகங் களுக்கு கதை, வசனம் எழுதினார் அவர் எழுதிய நாம் இருவர் நாடகத்தை ஏ.வி.மெய்யப்ப செட்டியார் படமாக தயாரித்தார். வேதாள உலகம் படத்திற்கு வசனம் எழுதினார். அண்ணாதுரையின் ஓர் இரவு படத்தின் மூலம் இயக்குனர் ஆனார்.

1957ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்த சக்ரவர்த்தி திருமகள் படத்தை இயக்கி னார். தொடர்ந்து நீதிக்கு தலைவணங்கு, நேற்று இன்று நாளை, ராமன் தேடிய சீதை, சங்கே முழுங்கு, குமரிகோட்டம், நீரும் நெருப்பும், ஒரு தாய் மக்கள், என் அண்ணன், மாட்டுக்கார வேலன், கணவன், காவல்காரன், கொடுத்து வைத்தவள், திருடாதே, படங்களை இயக்கினார்.

எம்.ஜி.ஆர் இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படங்களில் அவருடன் இணை இயக்குனராக பணியாற்றினார். எம்.ஜி.ஆரை கமர்ஷியல் ஹீரோவாக்கியதில் நீலகண்டனுக்கு பெரும் பங்கு உண்டு. கடைசிவரை எம்.ஜி.ஆருடன் நட்பாக இருந்த நீலகண்டன், அவரிடம் எந்த உதவியை யும் கேட்டு பெற்றதில்லை.

புகழ்பெற்ற பூம்புகார் படத்தை இயக்கினார். 1991ம் ஆண்டு வெளிவந்த தெய்வ திருமணங்கள் தான் இவர் இயக்கிய கடைசி படம். இதில் மீனாட்சி கல்யாணம் பகுதியை நீலகண்டன் இயக்கினார். எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குனராக இருந் தாலும் சிவாஜி நடித்த முதல் தேதி, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படங்களையும் இயக்கி னார். 1992ம் ஆண்டு இதே செப்டம்பர் 3ந் தேதி மறைந்தார்.

Leave A Reply

Your email address will not be published.