தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட டி.ராஜேந்தர் மனு பெற்றார்..

21

தமிழ் திரைப்பட தயாரிப் பாளர் சங்க தேர்தல் வரும் நவம்பர் 22ம் தேதி நடக்கி றது.இதனை  சென்னை உயர் நீதிமன்றத்தால்‌ நியமிக்கப் பட்ட தோ்தல்‌ அதிகாரி நீதியரசர்‌ எம்‌.ஜெயச்சந்திரன்‌ சமீபத்தில் அறிவித்தார். வரும் 16ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகியது. வரும் 29.10.2020 அன்று மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர்‌ பட்டியல்‌ வெளியிடப்பட உள்ளது.

 


வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய தயாரிபாளர்கள் சங்கத் தில் வேட்பு மனு பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் திரைப்பட தயாரிப் பாளர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந் தர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்தி ருந்த நிலையில் அவரது அணி சார்பில் அனைத்து நிர்வாகிகள் மற்றும் செயற் குழு உறுப்பி னர்கள் பொறுப்புக்களுக்கும் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றி ஆலோசித்து வந்தார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் டி.ராஜேந்தர் தனக்கும், தன் அணியின் சார்பாக தேர்தலில் போட்டியிடும் அனைத்து போட்டியாளர்களுக்கும் சேர்த்து தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நேரில் வந்து வேட்பு மனுவை பெற்று கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.