திரையரங்கு திறக்க அனுமதி: முதல்வருக்கு ஆர்.வி.உதயகுமார் நன்றி

15

கொரோனா கால ஊரடங்கால்  கடந்த 7 மாதமாக தியேடர்கள் மூடியிருந்தன. ஊரடங்கு தளர்வில் சினிமா தியேட்டர் களை வரும் 10ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கு திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள் ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த 7 மாதமாக கொரோனாவால் தமிழகம் பாதிக்கப்பட்டிருந்தது. மிக வேகமாக செயல்பட்டது தமிழக அரசு 95 சதவீதத்துக்கு மேல் கிட்டதட்ட மக்களை அரசு காப்பாற்றி இருக்கிறது. ஊடகங்கள் வாயிலாகவும், செல்போன் வாயிலாகவும் ஊடுருவிச் சென்று மக்களுக்கு நம்ம்பிகையை அரசு கொடுத்தது. 7 மாதத்துக்கு பிறகு தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் தியேட்டர் களில் படம் ஓடும், படம் ஓடினால் படைப்பாளிகளின் கேமரா ஓடும், இது இரண்டும் ஓடினால்தான் சினிமாக் காரர்களின் வாழ்கை ஓடும். எங்களு டைய திரையுலகினர் வாழ்கை ஓடுவதற் காக கதவை திறந்து விட்ட தமிழக முதல்வருக்கும், மற்றும் செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும் திரையுலகின் சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு ஆர்.வி.உதயகுமார் கூறி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.