சாதனை இயக்குனர் இராம நாராயணன் 7ம் ஆண்டு நினைவு நாள்

2

??????????

?126 படங்களை பல்வேறு மொழிகளில் இயக்கி சாதனை படைத்த
இராம நாராயணன் அவர்களுக்கு
இன்று (22.06.2021) அவரது
7 ஆம் வருட நினைவு நாள்?
?????????

19 70களில்
ராம் என்ற பெயரில் கதாசிரியராக வலம் வந்தவர் தான்
இராம நாராயணன்.?

பல மொழிகளில் நிறைய வெற்றிப்படங்களை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் தயாரித்தவர்..?

இவருடைய இயக்கத்தில் கலைஞர் மு.கருணாநிதி பாடலும் எழுதி உள்ளார். மேலும் வாலி, வைரமுத்து, பிறைசூடன், மு.மேத்தா, காமகோடியன் , டி. ராஜேந்தர் ஆகியோருடன் இவரும் பாடல் எழுதிஉள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.?

“நன்றி” என்ற படத்தை இயக்கினார். அதில் ஆக்சன் கிங்   அர்ஜுனை    கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார் இராம நாராயணன்.?

தி.மு.க. தலைவரும்
இன்றைய தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினை தனது இயக்கத்தில் இரு படங்களில் நடிக்க வைத்ததை பெருமைக் குரியதாக கருதியதாக அடிக்கடி கூறி வந்தவர் தான் இராம நாராயணன்.?

மேலும் இவருடைய இயக்கத்தில் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த், மற்றும் பிரபு, பாண்டியன், சுரேஷ், கராத்தே மணி, , சத்யராஜ், கவுண்டமணி, செந்தில் , ராம்கி, கார்த்திக், மு.க.முத்து பாண்டிய ராஜன், லிவிங்ஸ்டன், மெர்சி சிவா, ரவீந்தர், சிபிராஜ், முரளி, ஒய்.ஜி.மகேந்திரன், வெண்ணிறஆடை மூர்த்தி, விவேக், வடிவேல், கரண், ஆர்.சுந்தர்ராஜன், பவர் ஸ்டார் சீனிவாசன்,சங்கிலி முருகன், சரண்ராஜ், எஸ். பி. பாலசுப்ரமணியம், உபேந்திரா, செல்வா, உதயா என நிறைய பேர் நடித்துள்ளனர்.?

முன்னாள் எம்.எல்.ஏ.க்களான டி.ராஜேந்தர், ராதாரவி, எஸ்.வி.சேகர், வாகை சந்திரசேகர் இன்றைய ஆந்திரா மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினரும் பெப்சி தலைவராக உள்ள ஆர்.கே.செல்வமணி அவர்களின் மனைவியு மான ரோஜாவும், முன்னாள் மத்திய அமைச் சரான நெப்போலியனும், ராஜ்யசபா உறுப்பினராக இருந்த எஸ்.எஸ்.சந் திரனும், இவர் இயக்கத் தில் நிறைய படங்களில் நடித்தவர்கள். மக்களவை உறுப்பினராக இருந்த ராமராஜன் முதலில் இவரிடம் உதவியாளராக சேர்ந்து, சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டே வசனகர்த்தா வாக உயர்ந்து, பின்னர் கதாநாயகனானவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.?

இவரது இயக்கத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, சங்கர் கணேஷ், தேவா, எஸ். ஏ.ராஜ்குமார், சபேஷ் – முரளி, வித்யாசாகர், ஸ்ரீகாந்த்தேவா, ஆகியோர் இசையமைத்தவர்களில் முக்கியமானவர்கள்.?

ஒரு மாதம் ஒரு படம் என்றாலும் வருடத்திற்கு 12 படங்கள் தான் வரும். ஆனால் அன்றைய காலகட்டத்தில் இவருடைய இயக்கத்தில் ஒரு வருடம் 13 படங்கள் வெளிக் கொணர்ந்து அனைவரையும் ஆச்சரியப்படவைத்தவர் -?

தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, போஜ்புரி , ஒரியா, பெங்காலி, மொழிகளில் படங்களை இயக்கியவர். மலாய் மொழியிலும் படத்தை இயக்கி உள்ளார்.?

126 படங்களை பல்வேறு மொழிகளில் இயக்கி சாதனை படைத்த இவருடைய சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வைத்து, இவருக்கு சிலை வடித்து , விழா எடுத்து, திரை உலகம் கொண்டாட வேண்டும் என்பது பலரது எண்ணமாக இன்றும் உள்ளது.?

டாக்டர் கலைஞரன் வசன வரிகளில் நிறைய படங் களை இயக்கினார். கலைஞர் மீதும், அவர் குடும்பத்தினர் மீதும் மாறா அன்பும், அதிகமான பாசமும் வைத்து வாழ்ந் தவர்.?

காரைக்குடி தொகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப் பினராக வெற்றி பெற்று சிறப்பாக பணிபுரிந்து கலைஞரின் இதயத்தில் இடம் பிடித்தவர்.?

இவரிடம் உதவியாளராக இருந்த சோழ ராஜன், ராமராஜன், கே.தினகர், தியாகராஜன், புகழ்மணி, பேரரசு ஆகியோர் இயக் குனர்கள் ஆனவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.?

பெப்சி தலைவராக வி.சி.குகனாதனும், தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக இராம நாராயணனும் இருந்த பொழுதுதான் திரை உலகம் செழுமையும் , உற்சாகமும் இருந்தது என்று திரை உலகினர் கூறுவார்கள். குகநாதன் அவர்களிடம் உடன்பிறந்த சகோதரர் போல் நட்பு பாராட்டி மகிழ்ந்தவர்தான் இராமநாராயணன்.?

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் இரண்டு முறை தலைவராக முதல்வர் கலைஞரால் நியமிக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி கலைஞரிடம் பாராட்டு பெற்றவர்.?

தமிழ் திரைப்பட தயாரிப் பாளர் சங்கத்தின் தலைவ ராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக செயலாற்றி தயாரிப்பாளர் களின் நன்மதிப்பை பெற்றவர்.?

இவர் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருக்கையில் தான்
தயாரிப்பாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தி னருக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத் தப்பட்டது.?

சங்கத்தில் இவர் தலைவராக இருக்கையில் தான் 60 வயதிற்கு மேற்பட்ட தயாரிப்பா ளர்கள் விரும்பிக் கேட்டால் அவர்களுக்கு மாதம் தோறும் அன்புத் தொகை வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.?

இவர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தலைவராக இருக்கையில் அன்றைய அரசாங்கத்திடம் பேசி அரசு இடங்களில் படப் பிடிப்பு நடத்துவதற்கான கட்டணத்தை வெகுவாக குறைத்து தயாரிப்பாளர் களை பயனடைய வைத்தார்.?

பிலிம்சேம்பர் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பெரிதும் உதவியாய் இருந்தவர்.?

சென்னை அருகே பையனுாரில் தயாரிப்பா ளர்களுக்கு பத்து ஏக்கர் நிலத்தை அன்றைய முதல்வரான கலைஞரிடம் கேட்டு பெற்று
தயாரிப்பாளர்களுக்கான வீட்டு வசதி கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்த வரும் இவர் தான்.?

நேரடி தமிழ் திரைப் படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் முற்றிலும் கேளிக்கை வரி ரத்து என்ற அரசாணை யை முதல்வர் கலைஞரிடம் பெற்றுத் தந்தவரும் இவர்தான்..?

இப்படி இவரது சாதனையை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.?

அரசாங்கம், சக தயாரிப்பா ளர்கள், நடிகர் சங்கம், பிலிம்சேம்பர், பெப்சி, வினியோகஸ்தர் சங்கம், திரை அரங்கு உரிமை யாளர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், கில்டு, மக்கள் தொடர்பாளர்கள் யூனியன் மட்டுமல்ல வியாபார வித்தகர்களிடமும், பத்திரி கையாளர், மற்றும் ஊடகத்துறையினரிடமும். மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என மற்ற மொழி திரைப்படத் தயாரிப்பாளர்களிடமும் தோழமை உணர்வுடன் பழகி, சிரித்த முகத்துடன் பணி செய்து பவனி வந்தவர் இராம நாராயணன்.
அவர் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராய் இருந்த காலம் தமிழ் திரை உலகிற்கு ” பொற்காலம் ” என்று இன்றும் கூறுபவர்கள் உண்டு.?

இன்று
22.06.2021அவரது 7வது ஆண்டு நினைவு நாள்.?

ஒருவரின் ஆயுள்
இறப்பு வரை அல்ல
மற்றவர் மனதில் வாழும் வரை என்பார்கள்.
இராமநாராயணனும் நம் மனதில்
வாழ்கிறார்.
வாழ்வார்.
வாழ்ந்து கொண்டே இருப்பார்.?

அவர் சாதனைகளை பேசுவோம்.அவரின் நினைவுகளை போற்றுவோம். ?

?விஜயமுரளி
செயற்குழு உறுப்பினர்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ?

??????????

Leave A Reply

Your email address will not be published.