இயக்குனர் ராமநாராயணன் பிறந்தநாள்

1

இன்று (23–07 — 2021) கின்ன்ஸ் சாதனை இயக்குனர் ராமநாராயணன்
பிறந்தநாள்.

காரைக்குடி தந்த கண்ணியவான்

கலைஞரின் இதயத்தில் இடம்பிடித்த இயக்குனர்

பாடல் எழுதவந்து
பலருக்கு பாடல் எழுத
வாய்ப்பளித்தவர்.

நாடகம், சினிமா, அரசியல், என பன்முகத்தோடு
வலம் வந்தவர்.

சிரித்த முகம். சீர்திருத்த சிந்தனை .
செயலில் அழுத்தம்
என வாழ்ந்தவர்.

விலங்குகளிடம் வேலை வாங்கத் தெரிந்த வித்தகர்.

பத்து மொழிகளில்
படங்களை இயக்கி
சாதனை படைத்தவர்.

126 திரைப்படங்களை இயக்கிய முதல் தமிழன்

திரைப்படங்களின் வெற்றி தோல்வியை
சரிசமமாக எண்ணியவர்.

இன்றைய முதல்வர்
மு.க.ஸ்டாலின் அவர்களை தனது இயக்கத்தில் நடிக்க வைத்தவர்.

திரைப்பட விவரங்களை தனது அபார ஞாபகசக்தியில் சேமித்து வைத்தவர்.

இனிமையாகவும்
திறமையாகவும்
பிரச்சனைகளை கையாண்டவர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக மூன்று முறை தொடர்ச்சியாக தேர்வானவர்.

பதவி வகித்த காலத்தில் அந்தப் பதவிகள் இவரால் பெருமைப்பட்டது.

விருதுகளையும்
பாரட்டுகளையும்
எதிர்பார்க்காமல்
சேவை புரிந்தவர்.

பல புதுமுக நடிகர், நடிகைகள்
இயக்குனர்கள்|
தயாரிப்பாளர்கள், உருவாக உதவியவர்.

இராமநாராயணன்…
ஈர்ப்பு சக்தி உள்ள
இனிமையான பெயர்.

சாதனையாளர்கள்
புதைக்கப்படுவதில்லை.
விதைக்கப்படுகிறார்கள் என்பார்கள்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்சை நிறுவியர்.

இன்று இராமநாராயணன் பிறந்தநாள்.

அவரது படைப்புகளை போற்றுவோம்.
அவரது சேவைகளை
எடுத்து சொல்வோம்.
அவரது சாதனைகளை
புகழ்வோம்.

என். விஜயமுரளி
செயற்குழு உறுப்பினர்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

Leave A Reply

Your email address will not be published.