சதீஷ் சேகர் இயக்கத்தில் திகில் படம்

1

 

ஜிபிஆர்எஸ் புரொட க்ஷன்ஸ் எஸ்.சிவபிரகாஷ் தயாரிப்பில் முழுக்க முழுக்க திகில் படம் இயக்க உள்ளனர். அறிமுக இயக்குனர் சதீஷ் சேகர் இயக்கத்தில் தணிகை மற்றும் சோனியா நடிப்பில் உருவாகியிருக் கிறது. பல தமிழ்ப் படங் களை தயாரித்து வரும் எஸ்.சிவபிரகாஷ் முதல் முறையாக பெரும் பொருட் செலவில் பிரமாண்டமாக இந்த படத்தை தயாரித்து நடிக்கிறார். பாகுபலி,கபாலி மற்றும் விவேகம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட முக்கியமான படங்களுக்கு VFX துறையில் பணி யாற்றிய சதீஷ் சேகர் இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமா கிறார். கருப்பு கண்ணாடி படத்தின் கதாநாயகனும், அருள்நிதியின் டைரி படத்தில் முக்கிய கதாபாத் திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் தனியார் தொலைக்காட்சி தொகுப் பாளர் தணிகை இப்படத்தில் கதாநாயக னாக நடிக்கிறார். ரான், எழுமின் போன்ற படங் களில் பணியாற்றிய வியன் ராஜா இப்படத் திற்கு ஒளிப்பதிவு செய்கி றார். உறியடி படத்தின் கலை இயக்குனர் ஏழுமலை ஆதிகேசவன் இப்படத்தில் கலை இயக்குனராக பணிபுரிகி றார். எழுமின், மை டியர் லிசா மற்றும் அலேகா படங்களில் பணியாற்றிய கார்த்திக் ராம் இப்படத்தில் எடிட்டராக பணியாற்று கிறார்.
மேலும் stunt இயக்குன ராக ஃ‌பையர் கார்த்திக் பணிபுரிகிறார். பழங் காலக் கோவில் ஒன்றில் சிலை திருடு போக, அதைத் தொடர்ந்து பல கொடூர மரணங்கள் நிகழ்கிறது. அதற்கான காரணங்களை நாயகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து எவ்வாறு கண்டு பிடிக்கிறார் என்பதை பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக இப்படம் உருவாகவிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.