விஜய் சேதுபதிக்கு எதிராக சித்தரிக்கின்றனர் இயக்குனர் சீனு பேட்டி

கொலை மிரட்டல் குறித்து விளக்கம்

13

விஜய் சேதுபதியை 800 படத்தில் நடிக்க வேண்டாம் என்று சொன்னா இயக்குனர் சீனு ராமசாமிக்கு கொலை மிரட்டல் வந்தது. இது குறித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்த அவர் தனக்கு உதவுமாறு கேட்டிருக்கிறார்.

மிரட்டல் குறித்து சென்னையில்  சீனு ராமசாமி கூறியதாவது:

வாட்ஸ் அப் மூலமும், போனிலும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டு இருக்கின்றன.சமூக வலைத்தளத்திலும் தொடர்ந்து ஆபாசமாக திட்டுகின்றனர். நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக இருப்பதாக கூறி செய்திகள் சித்தரிக்கப்படுகின்றன. முரளிதரன் படத்தில் நடிக்க வேண்டாம் என நடிகர் விஜய் சேதுபதியிடம் கேட்டுக் கொண்டு இருந்தேன். கதைப் பிடித்ததால் அப்படத்தில் நடிக்க முன்வந்ததாகவும் அதன் பிறகே பின்னணி தெரிந்ததாகவும் விஜய் சேதுபதி கூறினார்.

‘நன்றி, வணக்கம்’ என கூறியதன் அர்த்தம் என்ன என விஜய்சேதுபதியிடம் கேட்டேன். விஜய்சேதுபதி நலன் கருதியே 800 படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறினேன். விஜய் சேதுபதி தமிழர்களின் விரோதத்தை எதிர்கொள்ள நேரிடும் என அறிவுறுத்தினேன். விஜய் சேதுபதிக்கு எதிராக நான் செயல்பட்டதாக கூறி தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. எனக்கு அரசியல் சினிமா எடுக்கத் தெரியும்; சினிமாவில் உள்ள அரசியல் தெரியாது.விரைவில் காவல்துறையில் எழுத்துபூர்வமாக புகார் அளிக்க உள்ளேன்.

இவ்வாறு சீனு ராமசாமி தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.