என் உயிருக்கு ஆபத்து உதவவும், முதல்வருக்கு சீனு ராமசாமி கோரிக்கை

14

தென்மேற்கு பருவகாற்று படத்தில் விஜய் சேதுபதியை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவர் மேலும் நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கண்மணியே போன்ற படங்களை இயக்கியதுடன் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் படம் இயக்குகிறார்.

சமீபத்தில் விஜய் சேதுபதி  இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை கதையான 800 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று இயக்குனர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்த்னர், அவர்களில் சீனு ராமசாமியும் ஒருவர் ஆவார். பின்னர் அப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகினார்.

இந்நிலையில் சீனு ராமசாமி தனது டிவிட்டர் பக்கத்தில், ’என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன் முதல்வர் அய்யா உதவ வேண்டும் அவசரம்;’ என குறிப்பிட்டு மெசேஜ் பகிர்ந்துள்ளார்.

சீனு ராமசாமியின் இந்த டிவிட்டால் திரையுலகில் பரபரப்பு ஏற்படுள்ளது.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், ’இது நான் எந்த அரசியல் கட்சிக்கு எதிராகவும் சொல்லவில்லை. நான் எந்த கட்சியும் சேராதவன். தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்ததால் எனக்கு இப்படி நிலை ’ என குறிப்பிட்டிருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.